கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மராட்டிய சிறைகளில் 52 கைதிகள் மரணம்


கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் மராட்டிய சிறைகளில் 52 கைதிகள் மரணம்
x
தினத்தந்தி 18 May 2018 5:25 AM IST (Updated: 18 May 2018 5:25 AM IST)
t-max-icont-min-icon

மராட்டிய சிறைகளில் கைதிகள் அடிக்கடி உயிரிழப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது.

மும்பை,

சிறைத்துறை அதிகாரிகள் வெளியிட்ட தகவலில் மாநிலம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் 52 கைதிகள் மரணமடைந்து இருப்பது தெரியவந்துள்ளது.

இதில் 24 பேரின் மரணம் குறித்த வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. ஆனால் 28 பேரின் மரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதிலும் மும்பை ஆர்தர் ரோடு சிறையில்தான் அதிக கைதிகள் உயிரிழந்துள்ளனர்.

இந்த சிறையில் மட்டும் கடந்த 7 ஆண்டுகளில் சுமார் 26 பேர் மரணமடைந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story