மாநிலத்தில் மேலும் 6 இடங்களில் திறந்தவெளி ஜெயில்
மராட்டியத்தில் மேலும் 6 இடங்களில் திறந்தவெளி ஜெயில்கள் அமைக்க உள்துறை திட்டமிட்டுள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் 13 திறந்தவெளி ஜெயில்கள் உள்ளன. இதில் 764 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அதிகபட்சமாக பைதான் திறந்தவெளி ஜெயிலில் 212 கைதிகள் உள்ளனர். சாதாரண ஜெயில்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் திறந்தவெளி ஜெயிலுக்கு மாற்றப்படுவார்கள்.
திறந்தவெளி ஜெயிலில் கைதிகளுக்கு தொழிற்பயிற்சிகள், தோட்டக்கலை, தச்சு, தையல், விவசாயம் போன்றவை கற்றுக்கொடுக்கப்படும்.
இந்தநிலையில் மாநிலத்தில் மேலும் 6 இடங்களில் திறந்தவெளி ஜெயில்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த ஜெயில்கள் சிந்துதுர்க், துலே, ரத்னகிரி, யவத்மால், லாத்தூர், வார்தா ஆகிய இடங்களில் அமைய உள்ளது. இதற்கு மாநில உள்துறை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது:-
திறந்தவெளி ஜெயில்களில் கைதிகளுக்கு பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படும். அங்கு கைதிகள் தயாரிக்கும் அல்லது உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் வெளியே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில சமயங்களில் ஒருசில கைதிகள் அவர்களின் குடும்பத்தினருடன் தங்கவும் இங்கு அனுமதிக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story