சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் கழிவுகளை தின்ற மான்கள்


சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் கழிவுகளை தின்ற மான்கள்
x
தினத்தந்தி 18 May 2018 11:33 PM GMT (Updated: 18 May 2018 11:33 PM GMT)

சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் கழிவுகளை மான்கள் தின்னும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மும்பை,

கழிவுகளை போட்டு சென்ற படக்குழுவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

மும்பையில் உள்ள சஞ்சய் காந்தி தேசிய பூங்காவில் சிறுத்தைப்புலி, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வன உயிரினங்கள் உள்ளன. இந்தநிலையில், வனப்பகுதியில் பிளாஸ்டிக் பைகளில் கொட்டப்பட்டு கிடக்கும் கழிவுகளை புள்ளிமான்கள் தின்னும் வீடியோ காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் இது தொடர்பாக சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு போரிவிலி அருகே சஞ்சய் காந்தி தேசிய பூங்கா வனப்பகுதியில் மும்பையை சேர்ந்த படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்த அனுமதி கொடுக்கப்பட்டு இருந்து உள்ளது. இந்த படப்பிடிப்பின் போது தான் அந்த கழிவுகள் அங்கு போடப்பட்டு இருந்து உள்ளது. அந்த கழிவுகளை புள்ளி மான்கள் தின்றது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட படக்குழுவுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

இதுபற்றி சஞ்சய் காந்தி தேசிய பூங்கா அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காட்டை பாதுகாப்பது வனத்துறையினர் பணி மட்டும் அல்ல. வனத்தை பார்வையிட வரும் பார்வையாளர்கள் குப்பைகளை போடுவதை தவிர்க்க வேண்டும்.

இதுபோன்ற சம்பவங்கள் வரும் காலங்களில் நடைபெறாமல் பார்த்து கொள்வோம்’ என்றார். 

Next Story