ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்


ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 19 May 2018 5:35 AM IST (Updated: 19 May 2018 5:35 AM IST)
t-max-icont-min-icon

ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஈரோடு

தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் கி.மூர்த்தி தலைமை தாங்கினார். பொருளாளர் ச.சிவசங்கர், செயலாளர் பா.ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாநில செயலாளர் பாஸ்கர்பாபு கலந்து கொண்டு பேசினார்.

பணி நெருக்கடியை நிறுத்தக்கோரி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கை குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள். இதில் வட்டார கிளைச்செயலாளர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.


Next Story