குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் வருசாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்


குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் வருசாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
x
தினத்தந்தி 20 May 2018 2:45 AM IST (Updated: 19 May 2018 7:44 PM IST)
t-max-icont-min-icon

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நேற்று வருசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தென்திருப்பேரை, 

குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலில் நேற்று வருசாபிஷேக விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

குரங்கணி முத்துமாலை அம்மன்

தென் மாவட்டங்களில் உள்ள பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில் தூத்துக்குடி மாவட்டம் குரங்கணி முத்துமாலை அம்மன் கோவிலும் ஒன்றாகும். இக்கோவில் வருசாபிஷேக விழா நேற்று நடந்தது. இதையொட்டி காலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டதை தொடர்ந்து, 7 மணிக்கு கோ பூஜை, யாகசாலை பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து 10 மணியளவில் யாகசாலையில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு கோவிலை வலம் வந்தது. பின்னர் 10.15 மணிக்கு கோபுரத்துக்கு புனிதநீர் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்ப அலங்கார தீபாராதனைகளும் நடந்தது. மதியம் ஒரு மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திரளான பக்தர்கள்

விழாவில் கோவில் நிர்வாக அதிகாரி அஜித் மற்றும் குரும்பூர், தென்திருப்பேரை சுற்றுவட்டாரங்களை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

விழா ஏற்பாடுகளை குரங்கணி 60 பங்கு நாடார்கள், சென்னை, கோவை வாழ் குரங்கணி வியாபாரிகள் சங்கத்தினர் செய்திருந்தனர்.


Next Story