நெய்வேலி, விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே நெய்வேலி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெய்வேலி,
நெய்வேலி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நெய்வேலி ஆர்ச்கேட் எதிரே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு நெய்வேலி நகர செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர் ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் திருஅரசு, முத்துவேல் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டனம் தெரிவித்து பேசினர்.
மேற்கு வங்க மாநிலத்தில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலின் போது நடந்த கலவர சம்பவத்தை கண்டித்தும், வன்முறையில் ஈடுபட்ட திரிமுனால் காங்கிரஸ் கட்சி தொண்டவர்களை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் நெய்வேலி நகர்குழு உறுப்பினர்கள் குப்புசாமி, சீனுவாசன், மணி, மணிமாறன், கார்த்திகேயன், ராமமூர்த்தி மற்றும் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர பொருளாளர் அன்பழகன் நன்றி கூறினார்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி விருத்தாசலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வட்ட செயலாளர் அசோகன் தலைமை தாங்கினார். வட்டக்குழு ஜீவானந்தம், குமரகுரு, கலைச்செல்வன், ராயர், சாமிதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.