விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது


விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது
x
தினத்தந்தி 19 May 2018 10:30 PM GMT (Updated: 19 May 2018 9:29 PM GMT)

விராலிமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

விராலிமலை,

புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலையில் புகழ் பெற்ற முருகன் கோவில் உள்ளது. இக்கோவிலில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் அருள்பாலித்து வருகிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் திருவிழாவையொட்டி இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு முருகன் வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் செய்து, கொடிமரம் முன்பாக ஹோமங்கள் செய்து சிவாச்சாரியார்கள் கொடியேற்றுகின்றனர். இதைத்தொடர்ந்து திருவிழா நாட்களில் முருகன் வள்ளி-தெய்வானையுடன் தினமும் காலை, மாலை இரு வேளையும் மயில், கேடயம், பச்சைமயில், பூதம், நாகம், யானை, சிம்மம், வெள்ளிக்குதிரை, வெள்ளிமயில், வாகனங்களில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

தேரோட்டம்

தொடர்ந்து 8-ம் திருவிழாவான 27-ந்தேதி தேதி முருகன் விராலூருக்கு பல்லக்கில் எழுந்தருளி அங்கு மண்டகப்படி நடக்கிறது. பின்னர் அங்கிருந்து மறுநாள் 28-ம் தேதி காலை விராலிமலைக்கு முருகன் வருகிறார். பின்னர் தேரோட்டம் நடக்கிறது. 29-ந்தேதி காலை நடராஜர் தரிசனமும், இரவு தெப்பத்திருவிழாவும் நடக்கிறது. 30-ந்தேதி விடையாற்றியுடன் திருவிழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரமேஷ் தலைமையில் செயல் அலுவலர் ராமராஜா, ஆய்வாளர் லெட்சுமணன், மேற்பார்வையாளர் மாரிமுத்து, மண்டகப்படிதாரர்கள், சிவாச்சாரியார்கள் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். 

Next Story