சுற்றுலா பஸ் கவிழ்ந்து 2 பேர் படுகாயம்
புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் 56 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சுற்றுலா பஸ் கொடைக்கானலுக்கு புறப்பட்டது.
பெரம்பலூர்,
புதுச்சேரியில் இருந்து நேற்று முன்தினம் 56 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒரு சுற்றுலா பஸ் கொடைக்கானலுக்கு புறப்பட்டது. அந்த பஸ் நள்ளிரவு சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தது. அப்போது பெரம்பலூர் நான்கு ரோடு அருகே வந்த போது, திடீரென்று டிரைவரின் கட்டுபாட்டை இழந்து பஸ் தாறு மாறாக ஓடியது. தொடர்ந்து பஸ் சாலையின் மையத்தில் உள்ள தடுப்புச்சுவரில் மோதி நிற்காமல் ஓடி தடுப்புகம்பியில் மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பஸ்சின் முன்பகுதி கண்ணாடி முற்றிலும் நொறுங்கியது. பஸ்சில் பயணம் செய்த பயணிகள் இடிபாடுகளுக் கிடையே சிக்கி தவித்தனர். இதனை கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் பஸ்சுக்குள் இடிபாடுகளுக்கிடையே சிக்கி தவித்த பயணிகளை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். இதில் 2 பயணிகள் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் லேசான காயத்துடன் தப்பினர். படுகாயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பெரம்பலூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனி சாமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story