இளவரசர் ஹாரி-மேகன் திருமணம்: டப்பாவாலாக்கள் கொண்டாட்டம்


இளவரசர் ஹாரி-மேகன் திருமணம்: டப்பாவாலாக்கள் கொண்டாட்டம்
x
தினத்தந்தி 20 May 2018 5:43 AM IST (Updated: 20 May 2018 5:43 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து இளவரசர் ஹாரி - அமெரிக்க நடிகை மேகன் திருமணம் நேற்று நடைபெற்றது.

மும்பை,

இளவரசரின் திருமணத்தை கொண்டாடும் வகையில் மும்பை பரேலில் மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்களுக்கு டப்பாவாலாக்கள் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர்.

இதுபற்றி மும்பை டப்பாவாலாக்கள் கூட்டமைப்பினை சேர்ந்த சுபாஷ் தலேகர் கூறும்பொழுது, திருமணத்திற்கு எங்களுக்கு அழைப்பு வரவில்லை என்றாலும், இந்த நேரத்தில் எங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வழி இது என கூறியுள்ளார்.

இங்கிலாந்து அரச குடும்பத்துடன் உணர்வுப்பூர்வ பிணைப்பு எங்களுக்கு உள்ளது. சில வருடங்களுக்கு முன் இளவரசர் சார்லஸ் அவரது திருமணத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த திருமணத்தில் மிக மரியாதையாக எங்களை நடத்தினர் என கூறினார்.

மேலும், இளவரசர் ஹாரிக்கு சல்வார் குர்தா மற்றும் ஒரு பேட்டாவும் (டர்பன்), மேகன் மார்கலேவுக்கு பைதானி சேலை ஒன்றும் டப்பாவாலாக்கள் சார்பில் பரிசாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.


Next Story