புனேயில் மண்ணுளி பாம்புகளுடன் 4 பேர் கைது
புனேயில் மண்ணுளி பாம்புகளுடன் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புனே,
புனே, முன்ஜோபா கோவில் அருகே சம்பவத்தன்று வக்காட் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டு இருந்தனர்.
அப்போது அந்த பகுதியில் சாக்குப்பையுடன் சிலர் சந்தேகத்திற்கு இடமாக நின்று கொண்டு இருந்தனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.
எனவே போலீசார் அவர்கள் வைத்திருந்த சாக்குப்பையில் சோதனை போட்டனர். அப்போது அதற்குள் 3 மண்ணுளி பாம்புகள் இருந்தன.
பாம்புகளை பறிமுதல் செய்த போலீசார் அதை வைத்திருந்த அமர் (வயது19), பாபாசாகிப் (21), பிம்ராவ் (22), சாகர் (22) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story