வறண்டு கிடக்கும் வைகுண்டபெருமாள் கோவில் குளம்


வறண்டு கிடக்கும் வைகுண்டபெருமாள் கோவில் குளம்
x
தினத்தந்தி 21 May 2018 4:15 AM IST (Updated: 21 May 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் வைகுண்டபெருமாள் கோவில் குளம் வறண்டு கிடக்கிறது. 108 திவ்ய தேசங்களில் பிரசித்தி பெற்ற காஞ்சீபுரம் வைகுண்ட பெருமாள் கோவில் உள்ளது.

காஞ்சீபுரம்,

கோவிலுக்கு தினந்தோறும், ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். இந்த கோவிலுக்கு சொந்தமான குளம் கடந்த பல ஆண்டுகளாக வறண்ட நிலையில் உள்ளது. 2015-ம் ஆண்டு பெய்த பலத்த மழையில் கூட இந்த குளத்தில் தண்ணீர் நிரம்ப வில்லை.

மாவட்ட நிர்வாகம் - இந்து சமய அறநிலையத்துறையினர் இந்த கோவில் குளத்தில் தண்ணீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Next Story