கொள்ளையர்களை பிடிக்க போலீசாருக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும், சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
கொள்ளையர்களை பிடிக்க போலீசாருக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டுமென சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தெரிவித்தார்.
புதுச்சேரி,
புதுச்சேரி காவல் துறை கிழக்கு போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் - பொதுமக்கள் நல்லுறவு கூட்டம் தனியார் ஓட்டலில் நடந்தது. கூட்டத்திற்கும் புதுவை சட்டம்-ஒழுங்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமை தாங்கினார். கிழக்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு வெங்கடசாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் செல்வம், மாறன், ஜெய்சங்கர் மற்றும் போலீசார் பல்வேறு நகர குடியிருப்பு சங்கத்தினர் கலந்துகொண்டனர். இதில் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் உள்ள பல்வேறு புகார்களை சரமாரியாக அடுக்கினார்கள்.
கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வகுப்தா பேசியதாவது:-
கோடை விடுமுறைக்கு வெளியூருக்கு செல்பவர்களின் வீட்டை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கைவரிசை காட்டி வருகிறார்கள். எனவே கோடை விடுமுறையில் வெளியூர் செல்பவர்கள் விலைமதிப்புள்ள பணம், நகைகளை வங்கி லாக்கரில் பாதுகாப்பாக வைத்துவிட்டு செல்லாம்.
குடியிருப்பு சங்கங்கள், மார்க்கெட் வியாபாரிகள் சங்கத்தினர் தங்களுடைய காலனி குடியிருப்புகளில் எந்த வாயில் வழியாக வாகனங்கள் வருகின்றன. எந்த வழியாக வெளியேறுகின்றன என்பதை கட்டாயம் பதிவு செய்யவேண்டும். தெருக்களை கண்காணிக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்க வேண்டும். கொள்ளையர்களை பிடிக்க போலீசாருக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.

Related Tags :
Next Story