வேதாரண்யம் அருகே தீயில் எரிந்து 2 கூரை வீடுகள் நாசம் ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
வேதாரண்யம் அருகே தீயில் எரிந்து 2 கூரை வீடுகள் நாசமானது. இதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தன.
வேதாரண்யம்,
நாகை மாவட்டம் வேதாரண்யம் தாலுக்கா கோவில்தாவு கிராமத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவர் கூரை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று ஸ்ரீதர் குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். அப்போது அவரது கூரை வீட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ அருகில் உள்ள ஸ்ரீதரின் மற்றொரு கூரை வீட்டுக்கும் பரவி கொழுந்து விட்டு எரிந்தது.
இதுகுறித்து வேதாரண்யம் தீயணைப்பு படைவீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இருப்பினும் 2 கூரை வீடுகளும் முழுவதும் எரிந்து நாசம் அடைந்தன.
இந்த தீவிபத்தில் 2 வீடுகளில் இருந்த தளவாட பொருட்கள் எரிந்து சேதம் அடைந்தன. இதன் சேதமதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. வேதாரண்யம் தாசில்தார் சங்கர் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டு அரசின் நிவாரண உதவியை வழங்கினார்.
இந்த தீவிபத்து மின்கசிவு காரணமாக ஏற்பட்டதா? என வேதாரண்யம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story