அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றிபெறும் தங்கதமிழ்செல்வன் பேச்சு


அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றிபெறும் தங்கதமிழ்செல்வன் பேச்சு
x
தினத்தந்தி 21 May 2018 4:10 AM IST (Updated: 21 May 2018 4:10 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தான் வெற்றிபெறும் என்று அக்கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கூறினார்.

நெல்லை,

அம்மா மக்கள் முன்னேற்றக்கழக பொதுக்கூட்டம் தச்சநல்லூரில் நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் கல்லூர் வேலாயுதம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் எம்.சி.ராஜன், இணை செயலாளர்கள் தவ்லத், இசையரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பால்கண்ணன் வரவேற்று பேசினார். கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் தங்கதமிழ்செல்வன் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

தவறான பாதையில்

தமிழ்நாட்டில் ஜெயலலிதா உருவாக்கிய நல்லாட்சியை எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் தவறான வழியில் நடத்து செல்கிறார்கள். அவர் எதிர்த்த ஹைட்ரோ கார்பன் திட்டம் மற்றும் மத்திய அரசு கொண்டு வந்து உள்ள பல திட்டங்களை ஆதரித்து மத்திய அரசிடம் மண்டியிட்டு கிடக்கிறார்கள். இவர்களுக்கு விசுவாசம், உண்மை எதுவுமே கிடையாது. ஜெயலலிதா கொண்டு வந்த பல திட்டங்களை மறந்துவிட்டனர்.

தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் நாங்கள்(அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்) தான் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் மாணிக்கராஜா, ஆர்.பி.ஆதித்தன், ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் பரமசிவ அய்யப்பன், இலக்கிய அணி இணை செயலாளர் ஆர்.எஸ்.கே.துரை, பிச்சுக்குட்டி, மாவட்ட செயலாளர்கள் சுப்பிரமணியன், சுந்தர்ராஜ், தொழிற்சங்க செயலாளர் ஆவின் அண்ணாசாமி, பகுதி செயலாளர்கள் அசன்ஜாபர்அலி, பேச்சிமுத்து, ஹைதர்அலி, சுப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story