தொப்பூர் கணவாயில் தொடர் விபத்து லாரிகள் கவிழ்ந்து டிரைவர்கள் காயம்
தொப்பூர் கணவாயில் தொடர் விபத்து லாரிகள் கவிழ்ந்து டிரைவர்கள் காயம் போக்குவரத்து பாதிப்பு
நல்லம்பள்ளி,
பெங்களூருவில் இருந்து நேற்று காலை டிரைலர் லாரி ஒன்று சேலம் நோக்கி வந்து கொண்டு இருந்தது. இந்த லாரியை குஜராத் மாநிலத்தை சேர்ந்த அகரம் (வயது 20) என்பவர் ஓட்டி வந்தார். இந்த லாரி தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாயில் வந்த போது சாலையோரம் இருந்த தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்தது. இதில் டிரைவர் அகரம் காயம் அடைந்தார். இதேபோன்று தர்மபுரியில் இருந்து நேற்று மாலை சேலத்திற்கு சென்ற லாரி தொப்பூர் ஆஞ்சநேயர் கோவில் அருகில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் டிரைவர் மனோகரன் காயம் அடைந்தார். இந்த தொடர் விபத்துகளால் தொப்பூர் கணவாயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த தொப்பூர் போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் விரைந்து சென்று காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் 2 லாரிகளையும் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்துகள் குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story