மேலூர் பகுதிகளில் கார் விபத்து 9 பேர் படுகாயம்
அவனியாபுரம், மேலூர் அருகே நடந்த கார்கள் விபத்தில் 9 பேர் பலத்த காயமடைந்தனர்.
அவனியாபுரம்,
மதுரை அவனியாபுரத்தை அடுத்த வலையங்குளத்தை சேர்ந்தவர் ராம்குமார்(வயது 20), கார் டிரைவர். இவர் நேற்று முன்தினம் மாலை காரில் மதுரையில் இருந்து வலையங்குளத்தை நோக்கி சென்று கொண்டிருந்தார். அந்த காரில் அதே ஊரை சேர்ந்த ராஜேஸ்வரி என்பவரும் சென்றார். அவனியாபுரம் ரிங் ரோட்டில் சென்ற போது எதிரே வந்த கார், ராம்குமார் ஓட்டி சென்ற கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில் காரில் இருந்த ராம்குமார், ராஜேஸ்வரி, மற்றொரு காரில் வந்த ஈரோட்டை சேர்ந்த ஜீவக்குமார், ஜெகவீரபாண்டியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து மதுரை நகர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இதேபோல மேலூர் அருகே வடக்குவலையபட்டியை சேர்ந்தவர் முத்தழகு. இவர் தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார். மேலூர் அருகே தும்பைப்பட்டியில் வந்த போது நான்குவழிச்சாலையின் நடுவே உள்ள தடுப்பு சுவர் மீது கார் மோதியதில் நிலை தடுமாறி மறுபக்கம் தாவிச்சென்று உருண்டது.
அப்போது எதிர் திசையில் வாகனம் ஏதும் வராததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. விபத்தில் காரில் வந்த முத்தழகு, அவரது மனைவி தேன்மொழி, குழந்தைகள் ஆர்த்தி, லோகேஸ் மற்றும் டிரைவர் பிரபு ஆகிய 5 பேர் படுகாயங்களுடன் மேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

Related Tags :
Next Story