அகத்தாகுளம் கிராமத்தில் சாயப்பட்டறை அமைக்க எதிர்ப்பு
திருச்சுழி அருகே அகத்தாகுளம் கிராமத்தில் தனியார் சாயப்பட்டறை அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என்பதை வலியுறுத்தி முத்தனேரி மற்றும் நத்தகுளம் கிராமத்தினர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
கலெக்டரிடம் திருச்சுழி அருகேயுள்ள நத்தகுளம், முத்தனேரி கிராம மக்கள் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது.
திருச்சுழி அருகே அகத்தாகுளம் கிராமத்தில் திருப்பூரை சேர்ந்த தனி நபர்கள் சாயப்பட்டறை அமைக்க பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். 2 எக்டேர் நிலத்தில் இந்த சாயப்பட்டறையின் கட்டுமான பணி நடந்து வருகிறது. இப்பகுதியில் சாயப்பட்டறைகள் அமைத்தால் முத்தனேரி, நத்தகுளம் கிராம விவசாயிகளுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும். மண்வளம், நிலத்தடி நீர், சுற்றுச்சூழல் பாதிக்கும் அபாயம் ஏற்படும். சாயப்பட்டறை புலியங்குளம் கண்மாய் நீர்பிடிப்பு பகுதியில் அமையும் வாய்ப்பு உள்ளது.
மேலும் குழவிகுளம், ரெகுநாதமடை, மீனாட்சிபுரம், நெல்லிக்குளம் ஆகிய கிராமங்களுக்கு சாயப்பட்டறை அமையும் இடத்தில் இருந்து ஆழ்குழாய் கிணறு மூலம் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. எனவே விவசாயிகளுக்கும், கிராம பொதுமக்களுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் சாயப்பட்டறையை அகத்தாகுளம் பகுதியில் அமைக்க அனுமதி வழங்க கூடாது. இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story