நத்தம் அருகே ஜல்லிக்கட்டு: சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 14 பேர் காயம்
நத்தம் அருகே நடந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் 14 பேர் காயம் அடைந்தனர்.
நத்தம்,
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே அய்யாபட்டியில் காளியம்மன், கருப்புசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவையொட்டி, அங்குள்ள மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடந்தது. இதனை, திண்டுக்கல் ஆர்.டி.ஓ. ஜீவா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதனையடுத்து மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்து கொண்டனர். அதன்பின்னர் ஜல்லிக்கட்டு தொடங்கியது.
ஜல்லிக்கட்டில் பங்கேற்க வந்த காளைகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. முதலில் கோவில் காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. அதனை யாரும் பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 313 காளைகள் ஜல்லிக்கட்டில் களம் இறங்கின. மாடுபிடி வீரர்கள் 250 பேரும் பங்கேற்றனர்.
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளை அடக்குவதற்கு வீரர்களிடையே கடும் போட்டி நிலவியது. துள்ளிக்குதித்த காளைகளை அடக்க காளையர்கள் மல்லுக்கட்டினர். வீரர்களிடம் சிக்காமல் சில காளைகள் சீறிப்பாய்ந்து ஓடின. பல காளைகளை வீரர் கள் மடக்கி பிடித்து அடக்கினர்.
காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிபடாத மாடுகளின் உரிமையாளர் களுக்கும் தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், நாற்காலி, சைக்கிள், பீரோ, எவர்சில்வர் மற்றும் பித்தளை பாத்திரங் கள், வேட்டி, துண்டுகள் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. ஜல்லிக் கட்டு நிகழ்ச்சியை திண்டுக்கல் மட்டுமின்றி பிற மாவட்டங் களை சேர்ந்த பொதுமக்கள் கண்டுகளித்தனர்.
ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகள் முட்டியதில் பார்வையாளர்கள், மாடுபிடி வீரர்கள் 14 பேர் காயம் அடைந்தனர். இவர்களுக்கு அரசு மருத்துவக்குழுவினர் சிகிச்சை அளித்தனர். நிகழ்ச்சியில் நத்தம் தாசில்தார் ஜான்பாஸ்டின், நத்தம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவலிங்கம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அய்யாபட்டி கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Tags :
Next Story