பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி ஏழை மக்களின் ரத்தத்தை குடிக்கின்றனர் முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றச்சாட்டு
பா.ஜ.க.வினர் நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்யாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களின் ரத்தத்தை குடிக்கின்றனர் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி,
புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தியின் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயம் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி கலந்து கொண்டு அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த ராஜீவ்காந்தியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பேசினார். பின்னர் அவர் கூறியதாவது.
மறைந்த பிரதமர் ராஜீவ்காந்தி அரசியலுக்கு வர விருப்பம் இல்லாமல் இருந்தார். சஞ்சய் காந்தி இறந்த பின்னர் இந்திராகாந்தியால் அரசியலுக்கு அழைத்து வரப்பட்டார். விருப்பமின்றி வந்தாலும், அரசியலுக்கு வந்ததும் சிறப்பாக செயல்பட்டார். புதிய கல்விக்கொள்கை, தொழில்கொள்கை, விஞ்ஞான கொள்கை, பொருளாதார கொள்கை ஆகியவைகளை கொண்டு வந்தார். நாடு பெரிய அளவில் வளர்ச்சி பெற வேண்டும் என்று பாடுபட்டார்.
சீக்கியர் கலவரம் ஏற்பட்டபோது பஞ்சாப் மாநிலத்தில் தனி நாடு கோரிக்கை எழுந்தது. அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அமைதி ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆட்சியை விட்டு கொடுத்தது. அதுபோல் அசாம், மிசோராம் மாநிலத்திலும் அமைதி ஏற்படுவதற்காக ஆட்சியை தியாகம் செய்த கட்சிதான் காங்கிரஸ்.
தற்போது பா.ஜ.க. மேகாலயா, மணிப்பூர், கோவாவில் குறைந்த எம்.எல்.ஏ.க்களை வைத்துக்கொண்டு கொல்லைப்புறமாக ஆட்சியை பிடித்தது. அதே நோக்கில் ருசி கண்ட பூனையாக கர்நாடகாவிலும் 104 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே வைத்துக்கொண்டு ஆட்சி அமைக்க முயற்சித்தது. பா.ஜ.க.வினர், காங்கிரஸ் கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை பிடிக்க ரூ.100 கோடிக்கு மேல் விலை பேசினார்கள்.
மெத்தனமாக இருக்கும் காங்கிரஸ் கட்சி கர்நாடக மாநில விவகாரத்தில் சுறு, சுறுப்படைந்து மதச்சார்பற்ற அணிகளை ஒருங்கிணைத்து போட்டியை சமாளித்து ஆட்சியை பிடித்துள்ளது. கர்நாடக மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை நாம் பாராட்ட வேண்டும். அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்ய மாட்டோம் என்று கூறிவிட்டனர்.
2019-ம் ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்று ராகுல்காந்தி பிரதமராக வர நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். மோடி, அமித்ஷா மற்றும் பா.ஜ.க.வின் வேஷம் கலைந்துள்ளது.
வடமாநிலங்களில் இருந்து தென்மாநிலங்கள் வரை கட்சிக்கு சம்பந்தம் இல்லாதவர்கள்கூட கர்நாடகாவில் ஜனநாயகம் காப்பாற்றப்பட்டுள்ளது என்று பாராட்டுகிறார்கள். நம் தலைவர் ராகுல்காந்தி ஏழை எளிய மக்கள் மேல் பரிவு கொண்டவர். ஆனால் பிரதமர் மோடி அம்பானி, அதானி போன்ற கார்ப்பரேட்காரர்களின் மீது பரிவு கொண்டவர்.
சோனியாகாந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் உயிருக்கு தீவிரவாதிகளால் மிகப்பெரிய ஆபத்து உள்ளது. அப்படி இருந்தாலும் கூட அதை அவர்கள் பொருட்படுத்தாமல் நாட்டு மக்களுக்காக தொடர்ந்து உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். தியாகத்தில் இருந்து வரும் குடும்பத்தினருக்கு நாம் தொண்டர்களாக இருந்து பணியாற்றுவதே நமக்கு பெருமை.
பா.ஜ.க.வில் ஒருவராவது நாட்டிற்காக ரத்தம் சிந்தி இருப்பார்களா? அவர்கள் நாட்டின் வளர்ச்சிக்காக எதையும் செய்யாமல் பணமதிப்பு இழப்பு, சரக்கு மற்றும் சேவை வரியை கொண்டு வந்தனர். பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வால் ஏழை, எளிய மக்களின் ரத்தத்தை குடிக்கின்றனர். இதற்கான விடிவு காலம் விரைவில் வரும். இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமிநாராயணன், அனந்தராமன், விஜயவேணி, முன்னாள் முதல்-அமைச்சர் ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சர் பெத்தபெருமாள், முன்னாள் எம்.எல்.ஏ. நீலகங்காதரன், பொதுச் செயலாளர் ஏகே.டி.ஆறுமுகம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story