வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிகள்
பிரபல வங்கியில் புரபெசனரி அதிகாரி பணிகளுக்கு 150 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இது பற்றிய விவரம் வருமாறு:-
இந்திய பொதுத்துறை வங்கிகளில் ஒன்று சவுத் இந்தியன் வங்கி. நாடு முழுவதும் ஏராளமான கிளைகள் செயல்படுகின்றன. தற்போது கேரள மாநிலம் திருச்சூரில் செயல்படும் இந்த வணிக வங்கியில் புரபெசனரி அதிகாரி (ஸ்கேல்-1) பணிக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. மொத்தம் 150 பேர் தேர்வு செய்யப் படுகிறார்கள்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்...
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 31-12-2017-ந் தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது 1-1-1993 மற்றும் 31-12-1998 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி:
ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்கள் 10, 12-ம் வகுப்பிலும் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம்.
கட்டணம்:
பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.800 மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.200 கட்டணம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். தேவையான இடத்தில் புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் 25-5-2018-ந் தேதியாகும். ஆன்லைன் தேர்வு ஜூன் மாதத்தில் நடத்தப்படும். தேதி பின்னர் அறிவிக்கப்படும்.
சட்ட அதிகாரி
இதேபோல மற்றொரு அறிவிப்பின்படி புரபெசனரி சட்ட அதிகாரி பணிக்கு 9 பேரும், தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரி பணிக்கு 7 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். எல்.எல்.பி. சட்டப்படிப்பு படித்தவர்கள் சட்ட அதிகாரி பணிக்கும், குறிப்பிட்ட பிரிவினர் பிஇ, பி.டெக் படித்தவர்கள் செக்யூரிட்டி அதிகாரி பணிக்கும் விண்ணப்பிக்கலாம். இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி நாள் 27-5-2018-ந் தேதியாகும்.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.souuthindianbank.com என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

Related Tags :
Next Story