வங்கியின் துணை நிதி நிறுவனத்தில் 590 பணியிடங்கள்
வங்கியின் துணை நிதி நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு 590 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இது பற்றிய விரிவான விவரம் வருமாறு:-
பிரபல பொதுத்துறை வங்கிகளில் ஒன்று பரோடா வங்கி. இதன் துணை நிறுவனம் பி.ஓ.பி. பினான்சியல் சொல்யூசன்ஸ் லிமிடெட் (பி.எப்.எஸ்.எல்) எனப்படுகிறது. கிரெடிட் கார்டு இன்சூரன்ஸ், டெபிட் கார்டு இன்சூரன்ஸ் உள்ளிட்ட வங்கி சாராத நிதி நிர்வாக பணிகளில் இது ஈடுபடுகிறது. தற்போது இந்த நிதி நிறுவனத்தில் சேல்ஸ் எக்சிகியூட்டிவ், சேல்ஸ் மேனேஜர், டீம் லீடர் போன்ற அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 590 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். இதில் சேல்ஸ் எக்சிகியூட்டிவ் பணிக்கு மட்டும் 500 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள், டீம் லீடர் பணிக்கு 65 பேரும், ஏரியா சேல்ஸ் மேனேஜர் பணிக்கு 25 பேரும் தேர்வு செய்யப்படுகிறார்கள். சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்பட இந்தியா முழுவதும் பல்வேறு நகரங்களில் பணியிடங்கள் உள்ளன.
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்க்கலாம்...
வயது வரம்பு:
ஏரியா சேல்ஸ் மேனேஜர் பணிக்கு 30 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். டீம் லீடர் பணிக்கு 25 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். சேல்ஸ் எக்சிகியூட்டிவ்ஸ் பணிக்கு 21 முதல் 35 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மேனேஜர், அசிஸ்டன்ட் மேனேஜர் போன்ற பணிகளுக்கு 30 முதல் 40 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
கல்வித்தகுதி:
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் பட்டப் படிப்பு படித்திருக்க வேண்டும். எம்.பி.ஏ. படித் திருந்தால், ஏரியா சேல்ஸ் மேனேஜர் பணிக்கு விருப்பத்தகுதியாக கொள்ளப்படும். ஒவ்வொரு பணிக்கும் குறிப்பிட்ட ஆண்டுகள் பணி அனுபவம் உள்ளது. சமீபத்தில் படித்து முடித்த பிரெஸ்ஸர்களுக்கும் குறிப்பிட்ட பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மற்றும் குழு கலந்துரையாடல் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் தங்கள் சுய விவர பட்டியலை குறிப்பிட்ட மெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதியானவர்கள் அடுத்தகட்ட தேர்வு முறைக்கு அழைப்புக் கடிதம் மூலம் அழைக்கப்படுவார்கள். விண்ணப்பம் salesforce.bob@bobcards.com என்ற மெயில் முகவரிக்கு சென்றடைய வேண்டும். விண்ணப்பிக்க கடைசிநாள் 25-5-2018-ந் தேதியாகும். இது பற்றிய விரிவான விவரங்களை www.bobfinancial.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Related Tags :
Next Story