மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து: லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவன்-மனைவி பலி


மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்து: லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவன்-மனைவி பலி
x
தினத்தந்தி 23 May 2018 3:45 AM IST (Updated: 22 May 2018 11:39 PM IST)
t-max-icont-min-icon

நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கி கணவன்-மனைவி பரிதாபமாக இறந்தனர்.

இடிகரை

கோவையை அடுத்த பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள வீரபாண்டியை சேர்ந்தவர் வி.சி.ரங்கசாமி. வீரபாண்டி பேரூராட்சி முன்னாள் தலைவர். இவருடைய மகன் மோகனசுந்தரம் (வயது 50). இவருடைய மனைவி கலாவதி (48). இந்த நிலையில் மோகனசுந்தரம் தனது மனைவி கலாவதியுடன் வீரபாண்டியில் இருந்து கோவை ஆர்.எஸ்.புரம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அவர்கள், நரசிம்மநாயக்கன்பாளையம் குமரபுரம் அருகே சென்ற போது பின்னால் வந்த லாரி மோகனசுந்தரம் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் நிலைதடுமாறிய மோகனசுந்தரம் தனது மனைவியுடன் ரோட்டில் விழுந்துள்ளார். அப்போது லாரியின் பின்சக்கரம் அவர்கள் மீது ஏறி சிறிது தூரம் இழுத்துச் சென்றது. இதில் மோகனசுந்தரம், கலாவதி ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இந்த விபத்து காரணமாக கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த பெரியநாயக்கன்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோகனசுந்தரம், கலாவதி ஆகியோரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story