மொபட் மீது லாரி மோதல்; தொழிலாளி சாவு
ஜெயங்கொண்டம் சாலை சந்தை பேட்டை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாய மடைந்த சின்னப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
அரியலூர்,
அரியலூர் அருகே உள்ள ஜெமீன் ஆத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னப்பன் (வயது 40). தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் இரவு பொருட்கள் வாங்குவதற்கு மொபட்டில் அரியலூருக்கு வந்துள்ளார். ஜெயங்கொண்டம் சாலை சந்தை பேட்டை அருகே வந்த போது அந்த வழியாக வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் படுகாய மடைந்த சின்னப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சின்னப்பன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவர் கருப்பண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
Next Story