பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக காங்கிரசார் வெளியிட்ட ஆடியோக்களின் உண்மை தன்மையை நிரூபிக்க வேண்டும்

பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக காங்கிரசார் வெளியிட்ட ஆடியோ பதிவுகளின் உண்மைத்தன்மையை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
மண்டியா,
பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக காங்கிரசார் வெளியிட்ட ஆடியோ பதிவுகளின் உண்மைத்தன்மையை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.
சந்தர்ப்பவாத கூட்டணிமண்டியா டவுனில் ஒரு தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய மந்திரி சதானந்த கவுடா நேற்று மண்டியாவுக்கு வந்தார். அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
கர்நாடகத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜனதாவுக்கு மக்கள் அமோக ஆதரவு தெரிவித்துள்ளனர். காங்கிரசையும், ஜனதா தளம்(எஸ்) கட்சியையும் அவர்கள் வெறுத்துவிட்டார்கள். அதனால்தான் அந்த 2 கட்சிகளுக்கும் குறைந்த இடங்களே கிடைத்துள்ளன. இருப்பினும் அவர்கள் குறுக்கு வழியில் சந்தர்ப்பவாத கூட்டணி அமைத்து ஆட்சியை அமைக்கின்றனர்.
இந்த சந்தர்ப்பவாத கூட்டணி 3 மாதங்களுக்கு மேல் நீடிப்பது கடினம். மாநிலத்தில் 104 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக பா.ஜனதா உருவெடுத்துள்ளது. எதிர்காலத்தில் எப்படியும் அரசியல் சூழ்நிலைகள் மாறும். அப்போது கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி மலரும்.
நிரூபிக்க வேண்டும்பிரதமர் நரேந்திர மோடியின் தவறான வழிகாட்டுதலின்பேரில், கவர்னர் வஜூபாய் வாலா தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும் பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பாவை கர்நாடக முதல்–மந்திரியாக பதவிப்பிரமாணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இது தவறு. இப்படி பேசுவது கண்டிக்கத்தக்கது. கவர்னர் தனது சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே எடியூரப்பாவுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எடியூரப்பா தனது முதல்–மந்திரி பதவியை ராஜினாமா செய்ய நேரிட்டது.
பா.ஜனதாவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் குற்றம்சாட்டி வருகிறார்கள். மேலும் சில ஆடியோ பதிவுகளையும் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். அந்த ஆடியோ பதிவுகளின் உண்மைத் தன்மையை அவர்கள் நிரூபிக்க வேண்டும். அது அவர்களால் முடியுமா?.
இவ்வாறு மத்திய மந்திரி சதானந்தகவுடா கூறினார்.