பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தபால் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம் தொடங்கினர்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கிராம தபால் ஊழியர்கள் நேற்று முதல் தொடங்கினர்.
புதுக்கோட்டை,
இந்தியா முழுவதும் உள்ள தபால் துறைகளில் பணியாற்றும் கிராம தபால் ஊழியர்களுக்கு 7-வது ஊதியக்குழுவை அமல்படுத்த வேண்டும். என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை கிராம தபால் ஊழியர்கள் நேற்று முதல் தொடங்கினர். இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள கிராம தபால் ஊழியர்களும் நேற்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர். இந்த வேலை நிறுத்தத்தில் ஏ.ஐ.ஜி.டி.எஸ்.வி., என்.யு.ஜி.டி.எஸ்., என்.எப்.பி.இ.-பி3 மற்றும் பி-4 ஆகிய சங்கங்களை சேர்ந்த ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்த காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட கிராம தபால் ஊழியர்கள் நேற்று புதுக்கோட்டையில் உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு நாகஜெயம், குணசேகரன், அடைக்கலம் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் குமார் உள்பட கிராம தபால் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story