கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்


கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும்
x
தினத்தந்தி 23 May 2018 4:00 AM IST (Updated: 23 May 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும் என்று விழுப்புரத்தில் நடந்த தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம்

விழுப்புரம் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் கழக அனைத்து அணிகளின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ராதாமணி எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர்கள் ஜெயச்சந்திரன், மைதிலி ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், வருகிற ஜூன் 3-ந் தேதி கட்சியின் தலைவர் கருணாநிதியின் 95-வது பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு, நோட்டு, புத்தகம் மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும், கூட்டுறவு சங்க தேர்தலை முறைகேடாக நடத்திய தமிழக அரசை கண்டிப்பது, உடனடியாக காவிரியில் தண்ணீர் திறந்து விட மத்திய அரசை வலியுறுத்துவது என்பன போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினகரன், மாணவர் அணி அமைப்பாளர் வினோத், விவசாய அணி அமைப்பாளர் பாஸ்கர், தொண்டர் அணி அமைப்பாளர் கபாலி, மகளிர் அணி அமைப்பாளர் உமாமூர்த்தி, விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் செல்வரங்கம், மீனவர் அணி அமைப்பாளர் மணி, இலக்கிய அணி அமைப்பாளர் ராஜாராம், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் முத்துகணேசன், ஆதிதிராவிடர் நல அணி அமைப்பாளர் கலைமணி, நெசவாளர் அணி அமைப்பாளர் முத்துவீரன், வர்த்தகர் அணி அமைப்பாளர் ஜெயமூர்த்தி, சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் அப்துல்சலாம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story