மன்னார்குடி பஸ் நிலையத்தில் தாறுமாறாக ஓடிய பஸ் மோதி விபத்து; பெண் பலி


மன்னார்குடி பஸ் நிலையத்தில் தாறுமாறாக ஓடிய பஸ் மோதி விபத்து; பெண் பலி
x
தினத்தந்தி 23 May 2018 4:15 AM IST (Updated: 23 May 2018 1:23 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி பஸ் நிலையத்தில் தாறு மாறாக ஓடிய பஸ் மோதியதில் பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார்.

சுந்தரக்கோட்டை,

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் இருந்து மன்னார்குடிக்கு நேற்று ஒரு தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. மன்னார்குடி பஸ் நிலையத்துக்குள் வந்தபோது அந்த பஸ் திடீரென டிரை வரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் பஸ் நிலையத்தின் நடைமேடையில் பஸ் ஏறியது.

அங்கு பஸ்சுக்காக காத்திருந்த தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தேவனாஞ்சேரி கிராமத்தை சேர்ந்த ராஜியா (வயது47) என்ற பெண் மீது பஸ் மோதியது. இந்த விபத்தில் ராஜியா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

படுகாயம்

மேலும் இந்த விபத்தில் மன்னார்குடி அருகே உள்ள சித்தேரி கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (40) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மன்னார்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story