கவரிங் நகைகளை விற்று ரூ.5¾ லட்சம் மோசடி தாய், மகள் உள்பட 3 பேர் கைது தமிழகத்தை சேர்ந்தவர்கள்


கவரிங் நகைகளை விற்று ரூ.5¾ லட்சம் மோசடி தாய், மகள் உள்பட 3 பேர் கைது தமிழகத்தை சேர்ந்தவர்கள்
x

கவரிங் நகைகளை விற்று ரூ.5 லட்சத்து 87 ஆயிரம் மோசடி செய்த தாய், மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

கவரிங் நகைகளை விற்று ரூ.5 லட்சத்து 87 ஆயிரம் மோசடி செய்த தாய், மகள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள் ஆவர்.

கவரிங் நகை

தென்மும்பை எல்.டி. மார்க் பகுதியில் உள்ள நகைக்கடைக்கு கடந்த 9-ந் தேதியன்று மூன்று பெண்கள் வந்தனர். அவர்கள் தங்களிடம் இருந்த நகைகளை அந்த கடையில் விற்று ரூ.5 லட்சத்து 87 ஆயிரம் வாங்கிக்கொண்டு, அங்கிருந்து அவர்கள் சென்று விட்டனர்.

இந்த நிலையில், அவர்கள் விற்ற நகைகள் அனைத்தும் கவரிங் என்பது தெரியவந்தது. நகைகள் மீது தங்கமுலாம் பூசியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நகைக்கடைக்காரர் சம்பவம் குறித்து எல்.டி.மார்க் போலீசில் புகார் கொடுத்தார்.

கண்காணிப்பு கேமரா

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்த்த போது, மோசடியில் ஈடுபட்ட பெண்கள் மூவரும் டாக்சியில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இதன் மூலம் அந்த டாக்சியின் டிரைவரை பிடித்து போலீசார் விசாரணையில் நடத்தினர். இதில் அவர் பெண்களை மான்கூர்டு பகுதியில் இறக்கி விட்டதாக தெரிவித்தார்.

இதையடு்த்து அங்கு சென்று போலீசார் நடத்திய விசாரணையில், மோசடியில் ஈடுபட்ட பெண்களில் இரண்டு ேபர் பிடிபட்டனர். அவர்களது பெயர் லட்சுமி (வயது50), அவரது மகள் ஜெயா (26) என்பதும், அவர்களது சொந்த ஊர் சேலம் என்பதும் தெரியவந்தது.

3 பேர் கைது

அவர்கள் தங்களுடன் மோசடியில் ஈடுபட்ட பெண் பெயர் சீதா என்றும், பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு அவர் சொந்த ஊரான சேலத்திற்கு சென்று விட்டதாகவும் தெரிவித்தனர். இந்த மோசடியில் சயானை சேர்ந்த ஆறுமுகம் (55) என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறினர். இவரும் தமிழகத்தை சேர்ந்தவர்.

இதையடுத்து போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சீதாவை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story