காஞ்சீபுரம் மாவட்டத்தில் 91.58 சதவீதம் பேர் தேர்ச்சி கலெக்டர் தகவல்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் 91.58 சதவீதம் பேர் தேர்ச்சி கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 24 May 2018 4:15 AM IST (Updated: 24 May 2018 4:02 AM IST)
t-max-icont-min-icon

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது. இதில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் 91.58 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்று கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார்.

காஞ்சீபுரம்

தமிழகத்தில் நடைபெற்ற எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இதுகுறித்து காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா நிருபர்களிடம் பேசியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை 584 பள்ளிகளில் 26 ஆயிரத்து 382 மாணவர்களும், 25 ஆயிரத்து 983 மாணவிகளும் என மொத்தம் 52 ஆயிரத்து 365 மாணவ-மாணவிகள் எழுதினர். அதில் 23 ஆயிரத்து 254 மாணவர்களும், 24 ஆயிரத்து 700 மாணவிகளும் என 47 ஆயிரத்து 954 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி சதவீதம் 88.14. மாணவிகளின் தேர்ச்சி சதவீதம் 95.06. மாணவ-மாணவிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 91.58.

அரசு பள்ளியை பொறுத்தவரை 218 பள்ளிகளில் 8 ஆயிரத்து 905 மாணவர்களும், 10 ஆயிரத்து 660 மாணவிகளும் என 19 ஆயிரத்து 565 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 7 ஆயிரத்து 20 மாணவர்களும், 9 ஆயிரத்து 759 மாணவிகளும் என 16 ஆயிரத்து 779 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 78.83 சதவீதமும், மாணவிகள் 91.55 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவ-மாணவிகளின் மொத்த தேர்ச்சி சதவீதம் 85.76.

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளை பொறுத்தவரை 685 மாணவர்களும், 632 மாணவிகளும் என 1317 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களில் 555 மாணவர்கள், 580 மாணவிகள் என 1,135 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 81.02 சதவீதமும் மாணவிகள் 91.77 சதவீமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 86.18 சதவீதம் மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நகராட்சி பள்ளிகளை பொறுத்தவரை 409 மாணவர்களும், 315 மாணவிகளும் என 724 மாணக்கர்கள் தேர்வு எழுதினர். அவர்களில் 349 மாணவர்களும், 286 மாணவிகளும் என 635 மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 85.33 சதவீதமும், மாணவிகள் 90.79 சதவீமும் என மொத்தம் 87.71 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் பாடப்பிரிவில் 49 ஆயிரத்து 204 மாணவ-மாணவிகளும், கணிதம் பாடப்பிரிவில் 49 ஆயிரத்து 495 மாணவ-மாணவிகளும், அறிவியல் பாடப்பிரிவில் 51 ஆயிரத்து 6 மாணவ-மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தில் 184 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளன. அதில் அரசு பள்ளிகள் 17, சமூக நலத்துறை பள்ளிகள் 3, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் 8, மெட்ரிக் பள்ளிகள் 151, ஆங்கிலோ இந்தியன் பள்ளி 1 அடங்கும்.

மாற்றுத்திறனாளி மாணவர்களை பொறுத்தவரை, கண்பார்வையற்றோர் பிரிவில் 12 பேர் தேர்வு எழுதி, 12 பேர் தேர்ச்சி பெற்று, 100 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர். காதுகேளாதோர் மற்றும் வாய் பேசாதோர் பிரிவில் 52 பேர் தேர்வு எழுதி, 41 பேர் தேர்ச்சி பெற்று, 78.85 சதவீத தேர்ச்சியை பெற்றுள்ளனர்.

மதிப்பெண்கள் அடிப்படையில் 481 மதிப்பெண்களுக்கு மேல் 406 பேரும், 451-480-க்குள் 2808 பேரும், 426-450க்குள் 3136 பேரும், 401-425க்குள் 3817 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

Next Story