டோம்பிவிலியில் 6-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை அடித்து சித்ரவதை செய்ததாக தந்தை கைது


டோம்பிவிலியில் 6-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை அடித்து சித்ரவதை செய்ததாக தந்தை கைது
x
தினத்தந்தி 24 May 2018 4:21 AM IST (Updated: 24 May 2018 4:21 AM IST)
t-max-icont-min-icon

டோம்பிவிலியில் 6-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை செய்துகொண்டான்.

அம்பர்நாத், 

டோம்பிவிலியில் 6-வது மாடியில் இருந்து குதித்து சிறுவன் தற்கொலை செய்துகொண்டான். அவனை அடித்து சித்ரவதை செய்ததாக தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

தந்தை அடித்தார்

தானே மாவட்டம் டோம்பிவிலி, சுனில் நகரில் உள்ள அம்ருத் சிருஷ்டி என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் உமேஷ் (வயது42). தொழில் அதிபர். இவரது மனைவி கவிதா(39). இவர்களுக்கு ஹிமான்சு (16) என்ற மகன் இருந்தான். உமேஷ் சிறு, சிறு காரணங்களுக்கு கூட மனைவி, மகனை அடித்து சித்ரவதை செய்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவத்தன்று அவர் மகன் ஹிமான்சுவை அடித்து உதைத்து சித்ரவதை செய்து உள்ளார்.

தற்கொலை

இதனால் விரக்தி அடைந்த அவன் தான் வசித்து வரும் கட்டிடத்தின் 6-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தான். இதில் படுகாயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிறுவனின் தந்தை உமேசை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story