37-வது நினைவு தினம் அனுசரிப்பு: சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை


37-வது நினைவு தினம் அனுசரிப்பு: சி.பா.ஆதித்தனார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 24 May 2018 9:15 PM GMT (Updated: 2018-05-25T01:46:22+05:30)

நெல்லையில் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 37-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

நெல்லை, 

நெல்லையில் ‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 37-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. அவரது உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சி.பா.ஆதித்தனார் நினைவு தினம்

‘தமிழர் தந்தை’ சி.பா.ஆதித்தனாரின் 37-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி நெல்லை தினத்தந்தி அலுவலகத்தில் சி.பா.ஆதித்தனாரின் உருவப்படம் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது. அவரது உருவப்படத்துக்கு தினத்தந்தி ஊழியர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன் தலைமையில் சி.பா.ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நெல்லை மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சங்கரபாண்டியன், பொருளாளர் ராஜேஷ்முருகன், மாவட்ட பொதுச்செயலாளர் சொக்கலிங்க குமார், தச்சை மண்டல தலைவர் தனசிங் பாண்டியன், மேலப்பாளையம் மண்டல தலைவர் சுல்தான் இப்ராகிம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

த.மா.கா.-த.ம.மு.க.

தமிழ் மாநில காங்கிரசார் நெல்லை மத்திய மாவட்ட தலைவர் சுத்தமல்லி முருகேசன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ரமேஷ்செல்வன், மாவட்ட துணை தலைவர் டி.பி.எஸ்.சுப்பிரமணியன், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவி செரினா, நெல்லை மண்டல தலைவர் கணேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நெல்லை மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் சி.பா.ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் தென் மண்டல செயலாளர் அழகர்சாமி, மாநகர இணை செயலாளர் துரைப்பாண்டியன், மாணவர் அணி செயலாளர் முத்துப்பாண்டியன், வர்த்தக அணி செயலாளர் ரூபன் பொன்ராஜ், மேலப்பாளையம் பகுதி செயலாளர் தங்கராஜ் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெருந்தலைவர் மக்கள் கட்சி

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் நெல்லை மாவட்ட தலைவர் எஸ்.அந்தோணி தாஸ் தலைமையில் சி.பா.ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட செயலாளர் ராமசுப்புராஜ், பொருளாளர் விக்னேஷ், துணை செயலாளர் ஸ்ரீதர், கட்சி நிர்வாகிகள் கிறிஸ்டோபர், இருதயராஜ், மனோகரன், ஜான் துரைசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

பொதிகை தமிழ் சங்க நிறுவன தலைவர் கவிஞர் ராஜேந்திரன் தலைமையில் சி.பா.ஆதித்தனார் படத்துக்கு மாலை அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் முருகன், கப்பையா, மாணிக்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story