நாகர்கோவிலில் அஞ்சல்துறை ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் அஞ்சல்துறை ஊழியர்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 Jun 2018 4:15 AM IST (Updated: 31 May 2018 8:30 PM IST)
t-max-icont-min-icon

கிராமிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவில் அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா குழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்தக்கோரி, கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் கடந்த 22–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

நாகர்கோவில்,

கிராமிய அஞ்சல் துறை ஊழியர்களுக்கு 7–வது ஊதியக்குழுவில் அமைக்கப்பட்ட கமலேஷ் சந்திரா குழு அறிக்கையை உடனடியாக அமல்படுத்தக்கோரி, மத்திய அரசை வலியுறுத்தி அனைத்திந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் மற்றும் அனைத்திந்திய அஞ்சல் ஊழியர் சங்கங்கள் சார்பில் கடந்த 22–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இதையொட்டி தினமும் பல்வேறு போராட்டங்களில் கிராமிய அஞ்சல்துறை ஊழியர்கள் ஈடுபட்டு வருகிறார்கள்.

குமரி மாவட்டத்தில் 10–வது நாளாக நேற்றும் இந்த போராட்டம் தொடர்ந்தது. நேற்று நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தின் முன் கருப்புக்கொடி மற்றும் கருப்பு பேனர் ஏந்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். போராட்டத்துக்கு கிராமிய அஞ்சல் ஊழியர் சங்க மாநில செயலாளர் இஸ்மாயில் தலைமை தாங்கி பேசினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தால் குமரி மாவட்டத்தில் 186–க்கும் மேற்பட்ட கிராமப்புற தபால் நிலையங்களின் பணிகள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதுவரை ரூ.50 கோடிக்கும் மேல் தபால்நிலைய பணப்பரிவர்த்தனை முடங்கியதாகவும், லட்சக்கணக்கான தபால்கள் பட்டுவாடா செய்யப்படாமல் தபால் நிலையங்களில் மூடைக்கணக்கில் தேங்கி கிடப்பதாகவும் நிர்வாகிகள் தெரிவித்தனர்.


Next Story