வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் பொதுமக்கள் அவதி


வங்கி ஊழியர்கள் 2-வது நாளாக வேலை நிறுத்தம் பொதுமக்கள் அவதி
x
தினத்தந்தி 1 Jun 2018 4:30 AM IST (Updated: 1 Jun 2018 3:19 AM IST)
t-max-icont-min-icon

வங்கி ஊழியர்களின் 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.

கரூர்,

வங்கி ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுகோரி வங்கி ஊழியர் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் மே மாதம் 30, 31-ந் தேதிகளில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். அதன்படி கரூர் மாவட்ட வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாவட்டத்தில் உள்ள பொதுத்துறை வங்கிகள் மற்றும் அதன் கிளைகளில் பணியாற்றும் 1,000-க்கும் மேற்பட்ட வங்கி ஊழியர்கள் நேற்று 2-வது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொதுத்துறை வங்கி மற்றும் அதன் கிளைகளில் பணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வங்கியில் இருந்து பணம் எடுப்பது மற்றும் செலுத்துவது, காசோலை பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை மேற்கொள்ள முடியாமல் பொதுமக்கள் பெரிதும் அவதிப்பட்டனர்.

கரூரில் டெக்ஸ்டைல் ஜவுளி நிறுவனங்கள், பஸ் பாடி கட்டும் நிறுவனங்கள், கொசுவலை உற்பத்தி நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் பணியின் சுழற்சிக்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க முடியாததால் அதன் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். சில ஏ.டி.எம். மையங்களில் பணம் வைக்கப்படாததால் பொதுமக்கள் ஆங்காங்கே ஏமாற்றத்துடன் சென்றதை காண முடிந்தது. ஆனால் வங்கிகளுக்கு தான் கோடிக்கணக்கில் பணபரிவர்த்தனை முடக்கமானதாக வங்கி அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவித்தனர். 

Next Story