குழந்தைகளை கடத்த வந்தவர் என நினைத்து வடமாநில வாலிபர் அடித்துக்கொலை
ஓசூரில் குழந்தைகளை கடத்த வந்தவர் என நினைத்து ஆத்திரமடைந்து வடமாநில வாலிபரை பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஓசூர்,
தமிழகத்தில் வடமாநிலத்தை சேர்ந்த கும்பல், குழந்தைகளை கடத்த வந்துள்ளதாக கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வதந்தி பரவி வருகிறது. சமீபத்தில் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மாரியம்மன் கோவிலுக்கு காரில் சென்று கொண்டிருந்தவர்களை குழந்தைகளை கடத்த வந்த கும்பல் என நினைத்து ஊர் பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். இதில் ருக்மணி என்ற மூதாட்டி உயிரிழந்தார்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரை குழந்தைகளை கடத்த வந்தவர் என நினைத்து பொதுமக்கள் அடித்துக்கொன்றனர்.
இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஒன்னல்வாடி அருகே குடிசாதனபள்ளி பக்கமாக நேற்று வடமாநிலத்தை சேர்ந்த 3 வாலிபர்கள் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அங்கு நின்ற பொதுமக்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அந்த 3 பேரையும் பிடித்து நீங்கள் யார்? இங்கு ஏன் சுற்றி திரிகிறீர்கள்? என கேட்டுள்ளனர். ஆனால் அந்த 3 பேருக்கும் தமிழ் தெரியாததால் அவர்கள் எதுவும் கூறாமல் அங்கிருந்து செல்ல முயன்றனர்.
இதன் காரணமாக குழந்தைகளை கடத்த வந்தவர்கள் என நினைத்து ஆத்திரமடைந்து 3 பேரையும் பொதுமக்கள் தாக்க ஆரம்பித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த வாலிபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். அதில் 2 பேர் பொதுமக்களிடம் இருந்து தப்பி ஓடிவிட்டனர். ஒருவர் மட்டும் சிக்கிக்கொண்டார். சிக்கிய அந்த வாலிபரை பிடித்து கை, கால்களை கட்டி போட்டு பொதுமக்கள் சரமாரியாக தாக்கினர். அப்போது அவர் தன்னை விட்டுவிடுமாறு இந்தியில் கூறி பொதுமக்களிடம் கெஞ்சினார்.
ஆனாலும் பொதுமக்கள் விடாமல் அவரை அடித்து உதைத்தனர். இதில் அவருக்கு காது, மூக்கு, வாய் உள்ளிட்ட இடங்களில் இருந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து அவர் மயங்கி விழுந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரை மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார். அதன்பின்னர் இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி வைத்தனர். இறந்த வாலிபருக்கு 30 வயது இருக்கலாம் எனவும், அவர் ஓசூரில் தங்கி தொழிலாளியாக வேலை செய்து வந்திருக்கலாம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தைகளை கடத்த வந்ததாக நினைத்து வடமாநில வாலிபரை பொதுமக்கள் அடித்துக்கொன்ற சம்பவம் ஓசூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதே போல ஓசூர் பாகலூர் சாலையில் உள்ள ஆசிரியர் காலனியில் நேற்று இரவு சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒருவர் சுற்றி திரிந்தார். அவரை அப்பகுதி மக்கள் பிடித்து விசாரணை நடத்தினர். ஆனால் அவர் எதுவும் சொல்லாமல் மவுனமாக இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த நபரை அடித்து உதைத்து ஓசூர் அட்கோ போலீசில் ஒப்படைத்தனர். இது தொடர்பாக அந்த நபரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story