சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய டெய்லர் கைது
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 62). இவர், தனது வீட்டிலேயே டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரிடம், 15 வயதுடைய சிறுமி ஒருவர், துணி தைக்க சென்றார்.
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் பகுதியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 62). இவர், தனது வீட்டிலேயே டெய்லர் கடை வைத்து நடத்தி வருகிறார். அவரிடம், 15 வயதுடைய சிறுமி ஒருவர், துணி தைக்க சென்றார். அப்போது அந்த சிறுமியிடம் அளவு எடுக்க வேண்டுமென கூறி வீரமுத்து வீட்டுக்கு உள்ளே அழைத்து சென்று வாயில் துணியை வைத்து அமுக்கி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த சிறுமியை மிரட்டி பலமுறை வீரமுத்து பாலியல் பலாத்காரம் செய்தார். இந்நிலையில், அந்த சிறுமிக்கு திடீரென வயிற்று வலி ஏற்பட்டதால் 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் 3 மாதம் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சிறுமிக்கு ரத்தப்போக்கு ஏற்பட்டு கர்ப்பம் கலைந்தது. பின்னர் அவர் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இதுகுறித்து ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி வழக்குப்பதிவு செய்து வீரமுத்துவை கைதுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story