நிலுவை சம்பளத்தை கேட்டு பாப்ஸ்கோ அதிகாரியிடம் தகராறு; ஊழியர் கைது
நிலுவை சம்பளத்தை கேட்டு பாப்ஸ்கோ அதிகாரியிடம் தகராறு செய்த ஊழியரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி
புதுவை அரசு சார்பு நிறுவனமான பாப்ஸ்கோவில் ஊழியர்களுக்கு பல மாதங்களாக சம்பளம் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் அவர்கள் தங்களுக்கு சம்பளம் வழங்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனாலும் பாப்ஸ்கோ நிர்வாகம் சம்பளம் வழங்க இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இந்தநிலையில் புதுவை காந்தி நகரில் வசிக்கும் பாப்ஸ்கோ ஊழியர் கோபி(வயது 37) நேற்று முன்தினம் தட்டாஞ்சாவடியில் உள்ள பாப்ஸ்கோ தலைமை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பணியில் இருந்து மேலாண் இயக்குனர் முத்து கிருஷ்ணனிடம் சென்று சம்பளம் வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்காததால் குழந்தைகளுக்கு பள்ளி கட்டணம் கட்ட முடியவில்லை என கூறி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. ஆத்திரத்தில் அங்கிருந்த நாற்காலிகளை அவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இது குறித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலை யரசன் மற்றும் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கோபியை கைது செய்தனர். இந்த நடவடிக்கை பாப்ஸ்கோ ஊழியர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story