வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய 2 பேர் கைது


வீடுகளின் பூட்டை உடைத்து நகை திருடிய 2 பேர் கைது
x
தினத்தந்தி 1 Jun 2018 4:54 AM IST (Updated: 1 Jun 2018 4:54 AM IST)
t-max-icont-min-icon

கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளின் வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது.

வண்டலூர்,

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கூடுவாஞ்சேரியை அடுத்த ஆதனூர் மேம்பாலம் அருகே கூடுவாஞ்சேரி போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படி 2 வாலிபர்கள் சுற்றிக்கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் அவர்கள் இருவரையும் பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்தனர். இதனையடுத்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சென்னை அசோக் நகர் பகுதியை சேர்ந்த அருணாச்சலம் (வயது 21), வேலூர் மாவட்டத்தை சேர்ந்த பிரபு கணேஷ்(24) என்பது தெரியவந்தது. இவர்கள் இருவரும் கூடுவாஞ்சேரி பகுதியில் பகல் மற்றும் இரவு நேரங்களில் பூட்டி இருக்கும் வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளையடிப்பதை ஒப்புக்கொண்டனர். இதனையடுத்து இருவரையும் கூடுவாஞ்சேரி போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகையை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்கள் இருவரும் செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர்.

Next Story