புகையிலையின் தீமைகள் குறித்து மின்னணு கையேடுகள் போலீஸ் துணை கமிஷனர் வெளியிட்டார்
புகையிலையின் தீமைகள் குறித்து மின்னணு கையேடுகளை கோவை மாநகர போலீஸ் துணை கமிஷனர் லட்சுமி வெளியிட்டார்.
கோவை
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் புகையிலை ஒழிப்பு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதற்கான நிகழ்ச்சி ஆஸ்பத்திரி மாநாட்டு கூடத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் ஆர்.விஜயகுமார் தலைமை தாங்கினார். கோவை மாநகர போலீஸ் துணைகமிஷனர் லட்சுமி புகையிலையின் தீமைகள் குறித்த மின்னணு கையேடுகளை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியிட் டார். இந்த நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் டாக்டர் பி.குகன் எஸ்.என்.ஆர் நிர்வாக அறங்காவலர் விஜயகுமார், மற்றும் இணை நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, புற்றுநோய் மருத்துவர் டாக்டர் கார்த்திகேசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் கோவை உள்பட 6 மாவட்டங்களில், புகையிலைக்கு எதிரான விழிப்புணர்வு நோட்டீசு வழங்குதல், குறும்படம் தயாரித்து பள்ளி கல்லூரிகளில் திரையிடுதல் உள்பட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
தற்போது இந்தியாவிலேயே முதன்முறையாக புகையிலையின் தீமைகள், விவரங்கள், டாக்டர்களின் விளக்கங்கள், புகைப்பழக்கத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பன போன்ற தகவல்கள் குறித்து மின்னணு கையேடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதை செல்போனில் ‘கியூ ஆர்’ கோடு பதிவு செய்தால் புகையிலையின் தீமைகள் குறித்த தகவல்கள் விளக்க படங்களுடன் தெரியும்.
கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் கிராமப்புறங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை 86 ஆயிரத்து 516 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தியதில் 139 பேருக்கு வாய்ப்புண் இருப்பது தெரியவந்தது. மற்றவர்களுக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருப்பது குறித்தும் அது எந்த நிலையில் உள்ளது? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன? என்றும் அவர்களிடம் விளக்கி கூறப்பட்டது. 46 ஆயிரத்து 387 பேருக்கு புற்றுநோய் விழிப்புணர்வு விளக்கங்கள் இலவசமாக அளிக்கப்பட்டன.
இவ்வாறு டாக்டர் பி.குகன் கூறினார்.
Related Tags :
Next Story