முத்தூர் அருகே மொபட் மீது கார் மோதல்; பள்ளி மாணவன் சாவு
முத்தூர் அருகே மொபட் மீது கார் மோதியதில் பள்ளி மாணவன் பலியானான்.
முத்தூர்,
திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே உள்ள ரங்கப்பையன்காட்டை சேர்ந்தவர் சின்னத்துரை. கிணறு வெட்டும் தொழிலாளி. இவரது மகன் அரவிந்த் (வயது 15). அரவிந்த் தற்போது 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளான்.
இந்த நிலையில் அரவிந்த் நேற்றுமாலை 4 மணிக்கு தனது வீட்டில் இருந்து மொபட்டில் முத்தூர் நோக்கி ரங்கப்பையன்காடு பஸ் நிறுத்தத்தை தாண்டி சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த கார் எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்து மொபட் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட அரவிந்த் சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதி கீழே விழுந்து விட்டான். அப்போது மின் கம்பத்தில் மோதிய வேகத்தில் தலையில் பலத்த அடிபட்ட அரவிந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்துவிட்டான்.
இதுபற்றி தகவல் அறிந்த வெள்ளகோவில் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் பலியான பள்ளி மாணவன் அரவிந்த் உடலை மீட்டு காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளி மாணவன் அரவிந்த் தனது வீட்டின் அருகிலேயே விபத்தில் இறந்த தகவல் அறிந்த அவனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரவிந்தின் உடலை பார்த்து கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story