நாமக்கல்லில் ஜமாபந்தி: மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவித்தொகைக்கான ஆணை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்
நாமக்கல்லில் நடந்த ஜமாபந்தியில் மாற்றுத்திறனாளி பெண்ணுக்கு உதவித்தொகைக்கான ஆணையை கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்.
நாமக்கல்
நாமக்கல் தாசில்தார் அலுவலகத்தில் கடந்த 29-ந் தேதி முதல் ஜமாபந்தி நடைபெற்று வருகிறது. காரைக்குறிச்சி, எஸ்.நாட்டாமங்கலம், ராமநாய்க்கன்பட்டி, ஆரியூர், பேட்டப்பாளையம், மோகனூர், ராசிபாளையம், ஒருவந்தூர், கொமரிபாளையம் ஆகிய கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நேற்று முன்தினம் பட்டா மாறுதல், முதியோர்் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 46 மனுக்களை கலெக்டர் ஆசியா மரியத்திடம் வழங்கினர்.
இந்த நிகழ்ச்சியில் மாதாந்திர உதவித்தொகை கேட்டு கோரிக்கை மனு அளித்த நாமக்கல் எம்.ஜி.ஆர். நகர் பகுதியை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறனாளி சிபோரால் என்ற பெண்ணிற்கு மனு அளித்த சில நிமிடங்களிலேயே, மாதாந்திர உதவித்தொகையாக மாதம் ரூ.1,000 பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். தொடர்ந்து பல்வேறு வகையான பதிவேடுகளை கலெக்டர் பார்வையிட்டு சரிபார்த்தார். இதில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) ராகவேந்திரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், தாசில்தார் செந்தில்குமார், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் செல்வராஜ், கலெக்டர் அலுவலக மேலாளர் (நீதியியல்) ராஜன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story