ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பள்ளி ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 3 Jun 2018 3:30 AM IST (Updated: 3 Jun 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி ஆசிரியருக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிராமமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர்,

ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள சின்ன அத்திகுளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கல்வித்தரம் குறைந்ததால் மாணவர்களை பள்ளியில் சேர்க்க பெற்றோர் தயங்கி வந்தனர். இதுதொடர்பாக கிராம மக்கள் புகார் மனுக்களை கல்வித்துறை அலுவலர்களுக்கு அனுப்பினர். இதைதொடர்ந்து இந்த பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர் கண்ணன், செம்பட்டையன்கால் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளிக்கு மாற்றப்பட்டார். இந்தநிலையில் தற்போது பள்ளி திறக்கப்பட்டதும், ஆசிரியர் கண்ணன் செம்பட்டையன்கால் பள்ளிக்கு சென்றார். அப்பேபது அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்களும் ஆசிரியர் கண்ணனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவரை இங்கு பணியாற்ற அனுமதிக்க மாட்டோம் என கூறினர். இதனையடுத்து கல்வி அதிகாரிகள் அங்கு வந்து கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் உறுதி அளித்தனர். இதைதொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.


Next Story