விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்
விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் என பா.ஜ.க. மாவட்ட செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விராலிமலை,
விராலிமலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சேதுபதி தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி ரெங்கசாமி முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு விருந்தினராக மாநில துணைதலைவர் கஜேந்திரன் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையம் அமைத்து கொடுத்த மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விராலிமலை ஊராட்சியை பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும்.
விராலிமலை ஊராட்சியில் உள்ள தெருக்களில் தேங்கியுள்ள கழிவுநீரால் தொற்றுநோய் உருவாக காரணமாக உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை வேண்டும்.
அடிப்படை வசதி
புதுக்கோட்டை மாவட்டத்தை பழைய முறைப்படி நாடாளுமன்ற தொகுதியாக மீண்டும் தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும். ஆவுடையார் கோவிலில் அடிப்படை வசதி இல்லாமல் செயல்படும் அரசு மருத்துவமனையில் உடனடியாக அடிப்படை வசதி ஏற்படுத்தி, 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்துக்களை மதம் மாற்றம் செய்யும் அமைப்புகளை கண்டிப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட கட்சி நிர்வாகிகள் சிவசாமி, கென்னடி சுந்தரம், சண்முகசுந்தரம்், முருகேசன், சிவஞானம் உள்பட மாநில, ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக ஒன்றிய தலைவர் ராஜ்குமார் வரவேற்றார். முடிவில் ஒன்றிய செயலாளர் நாச்சியப்பன் நன்றி கூறினார். முன்னதாக விராலிமலை புதிய பஸ் நிலையம், நம்பம்பட்டி ஆகிய இடங்களில் கட்சி கொடியை மாநில துணை தலைவர் கஜேந்திரன் ஏற்றி வைத்தார்.

Related Tags :
Next Story