கன்னியாகுமரிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது


கன்னியாகுமரிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் அரிசி சரக்கு ரெயிலில் அனுப்பி வைக்கப்பட்டது
x
தினத்தந்தி 3 Jun 2018 4:00 AM IST (Updated: 3 Jun 2018 3:03 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூரில் இருந்து கன்னியாகுமரிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக சரக்கு ரெயிலில் 1,250 டன் அரிசி அனுப்பி வைக்கப்பட்டது.

திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் சம்பா சாகுபடி பணிகள் நிறைவு பெற்று விட்டது. இதை தொடர்ந்து நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் அரசு அங்கீகரிக்கப்பட்ட அரவை மில்லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அரவை செய்யப்பட்டு அரிசி மூட்டைகள் நுகர்பொருள் வாணிப கழக சேமிப்பு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு பொதுவினியோக திட்டத்திற்காக பல மாவட்டங்களுக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அதன்படி திருவாரூரில் இருந்து கன்னியாகுமரிக்கு பொதுவினியோக திட்டத்திற்காக 1,250 டன் சன்னரக அரிசி சரக்கு ரெயிலில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டன. முன்னதாக திருவாரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சேமிப்பு கிடங்கில் இருந்து அரிசி மூட்டைகள் 100 லாரிகள் மூலம் திருவாரூர் ரெயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. அங்கு லாரிகளில் இருந்து அரிசி மூட்டைகளை சுமை தூக்கும் தொழிலாளர்கள் சரக்கு ரெயிலின் 24 பெட்டிகளில் ஏற்றினர். இதை தொடர்ந்து சரக்கு ரெயில் அரிசி மூட்டைகளுடன் கன்னியாகுமரிக்கு புறப்பட்டு சென்றது. 

Next Story