மும்பையில் திடீர் மழை பொதுமக்கள் மகிழ்ச்சி
மும்பையில் நேற்று திடீரென பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
மும்பை,
மும்பையில் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக கோடை வெயில் கொளுத்தியது. அதிலும் கடந்த சில நாட்களாக வெயிலின் கொடுமை அதிகமாக இருந்தது. இதன் காரணமாக மும்பைவாசிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி வந்தனர். எனவே கோடை வெயிலுக்கு விடை கொடுத்து பருவமழை எப்போது தொடங்கும் என ஏக்கத்தில் இருந்தனர். வானிலை ஆய்வு மையம் மும்பையில் வருகிற 6-ந் தேதி பருவமழை தொடங்கும் என தெரிவித்து இருக்கிறது.
இந்தநிலையில், நேற்றும் வழக்கம் போல வெயில் சுட்டெரித்தது. இரவு வானில் கருமேகங்கள் திரண்டன.
இரவு 8 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. ஆரம்பத்தில் தூறலாக பெய்த மழை பின்னர் பலத்த மழையாக பெய்தது. கிழக்கு புறநகர், மேற்கு புறநகர், மத்திய மும்பை பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது. மழையின் போது பலத்த காற்றும் வீசியது.
எதிர்பார்க்காத இந்த திடீர் மழையால் வீட்டில் இருந்த வெளியே வந்திருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பாதசாரிகள் என பலரும் மழையில் நனைந்தனர். வெயிலின் தாக்கத்தால் அவதிப்பட்டு வந்த மும்பைவாசிகளுக்கு நேற்று இரவு காற்றுடன் பெய்த இந்த திடீர் மழை மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோல தானேயில் டோம்பிவிலி, கல்யாண், மிராரோடு உள்ளிட்ட இடங்களில் இரவு பரவலாக மழை பெய்தது.

Related Tags :
Next Story