குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை..
‘பத்து நாட்களில் உடல் எடைைய குறைப்பது எப்படி?’ என்பது, இப்போது பெண்கள் அடிக்கடி படிக்க விரும்பும் விஷயமாக இருக்கிறது.
சற்று குண்டாக இருக்கும் பெண்கள் காலையில் எழுந்ததும் கண்ணாடி முன்னால் போய் நின்று கொண்டு, ‘இன்னும் கொஞ்சம் உடல் எடையை குறைக்க சாப்பிடலாமா அல்லது பட்டினி கிடக்கலாமா?’ என்று தினமும் யோசிக்கிறார்கள். சமூகமும் குண்டானவர்களை சற்று கிண்டலாகத்தான் பார்க்கிறது. அந்த வகையில் நடிகை சரண்யா மோகன் திருமணத்திற்கு பின்பு சற்று குண்டானதை சுட்டிக்காட்டி வம்பு வளர்த்தார்கள். அதற்கு வித்தியாசமாக பதிலடி கொடுத்தார், அவரது கணவர். ‘இந்த உலகில் என் மனைவியின் உடல் எடையை விட பெரிய பிரச்சினைகள் எத்தனையோ இருக்கின்றன. அதற்கெல்லாம் தீர்வுகாணாமல் இதை பற்றி பேசிக்கொண்டிருப்பவர்களை என்ன சொல்வது?’ என்று வலிக்காத வார்த்தைகளால் அழுத்தமாக பதில்கொடுத்தார். உண்மையில் சற்று குண்டாக இருப்பதால் குறை ஏதும் இல்லை.
உடல் அளவைப் பொறுத்தவரையில் சினிமா நடிகைகளைப் போன்ற ‘ஜீரோ சைஸ்’ தோற்றத்தை எல்லா பெண்களுமே விரும்புகிறார்கள். ஆனால் பேஷன் ஷோக்களில் ‘பிளஸ் சைஸ்’ எனப்படும் பூசி மெழுகினாற் போன்ற உடல்வாகு கொண்ட பெண்களுக்கும் அதிக மவுசு இருக்கிறது. லாக்மே நிறுவனம் பேஷன் வீக் நிகழ்வுக்கு பிளஸ் சைஸ் மாடல்களை தேர்வு செய்தது. அந்த தேர்வுக்காக சற்று குண்டான உடல்வாகு கொண்ட 100 பெண்கள் வந்திருந்தார்கள். அனைவருமே அழகிலும், தன்னம்பிக்கையிலும் தலைநிமிர்ந்து நின்றிருந்தார்கள்.
பெண்களின் உடல் எடை எவ்வளவு இருக்கவேண்டும் என்பதை கணக்கிடுவது எளிது. உயரத்தை சென்டிமீட்டரில் அளந்து அதில் 100-ஐ கழித்து விட்டால், சரியாக எவ்வளவு எடை இருக்கவேண்டும் என்பது தெரிந்துவிடும். 165 செ.மீ. உயரம் கொண்ட பெண்ணின் ஆரோக்கிய எடை 65 கிலோ என்று எடுத்துக் கொள்ளலாம். ‘பாடி மாஸ் இன்டக்ஸ்’ அடிப்படையில் பார்த்தால் 19-க்கும் 25-க்கும் இடையில் இருப்பவர்கள் சரியான எடையுடன் இருக்கிறார்கள் என்று அர்த்தம். 18.5-க்கு கீழ் இருப்பவர்கள் போதுமான உடல் எடை இல்லாத ஒல்லிப்பெண்கள். 25 முதல் 30 வரை இருப்பவர்களை பிளஸ் சைஸ் கொண்டவர்கள் என்றும், 30-க்கு மேல் இருப்பவர்களை குண்டானவர்கள் என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
குண்டாக இருப்பவர்களுக்கு சில நெருக்கடிகள் இருக்கத்தான் செய்கின்றன. உடன் இருப்பவர்களே கேலி, கிண்டல் செய்து தன்னம்பிக்கையை குறைப்பார்கள். கோபம் வரும்போது குடும்பத்தில் உள்ளவர்களே உடல் அமைப்பை சுட்டிக்காட்டி வெறுப்பேற்றுவார்கள். அதனால், குண்டானவர்கள் பொது இடங் களுக்கு செல்லாமல் தங்களை தனிமைப்படுத்தியபடி அறைக்குள்ளே முடங்கிக்கொள்வார்கள். அப்படி முடங்குவது அவர்களுக்கு மனஅழுத்தத்தை உருவாக்கி, எதிர்கால முன்னேற்றத்துக்கு தடையை உருவாக்கிவிடும்.
உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போதே பட்டினி கிடப்பது, உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகிய மூன்று விஷயங்களும் குண்டாக இருப்பவர்களின் நினைவுக்கு வரும். இதில் சரியான ஆலோசனையை பெற்று, முறையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் உடல் நலம்கெட்டு, மன அழுத்தமும் உருவாகி விடும்.
உடல் எடை அதிகமாக இருப்பதாக கருதும் பெண்கள் முதலில் தங்கள் வீட்டில், தனது முழு உருவத்தையும் பார்க்கும் விதத்தில் கண்ணாடி ஒன்றை வாங்கி வைக்க வேண்டும். தினமும் காலையில் அதை பார்த்தபடி, ‘நான் என் உடலை நேசிக்கிறேன். நான்தான் இந்த உலகிலே உற்சாகமானவள்’ என்று சொல்ல வேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதுபோல் உடல்வாகுவை சுட்டிக்காட்டி கேலி செய்பவர்களை புறக் கணிக்கும் அளவுக்கு மனதுணிச்சலையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
உடல் எடை அதிகம் கொண்டவர்கள் தங்கள் உடையில் கவனம் செலுத்துவது அவசியம். அவர்கள் பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவுகரியமாகவும் இருக்கும். அதிக இறுக்கம் கொண்ட ‘பிகர் ஹக்கிங் டிரஸ்’ வகைகள் அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்காது. அதற்கு பதிலாக அதிக தளதள உடைகளை அணிவதும் சரியல்ல. இரண்டு நிலைக்கும் பொதுவான உடைகள் அவர் களுக்கு ஏற்றது. அவர்கள் உள்ளாடைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அவை சரியாக பொருந்தவேண்டும். சுகாதாரமானதாகவும், தரமானதாகவும் அவை இருக்கவேண்டும். உள்ளாடை தேர்வு சரியாக இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உடை அலங்காரமும் சொதப்பிவிடும்.
உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலான உடையை குண்டானவர்கள் அணிவது நல்லது. ஒவ்வொரு பகுதி ஆடையும் வெவ்வேறு நிறத்தில் இருப்பது நல்லதல்ல. பல்வேறு வகையான நிறங்களும், பலவிதமான டிசைன்களும் குண்டானவர் களுக்கு ஏற்றதல்ல. அடர்த்தியான நிறம் அவர்களுக்கு ஏற்றது. சிலருக்கு உடலின் மேல்பாகமும், கீழ் பாகமும் மட்டும் குண்டாக இருக்கும். இடைப்பகுதி ஒல்லியாக காணப்படும். அப்படிப்பட்டவர்கள் ஒல்லியான பகுதியில் இறுக்கமான உடைகளை அணியலாம். அப்போது குண்டாக இருக்கும் பகுதியில் அணியும் ஆடையும் இறுக்கமாக, பொருத்தமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.
சிலர் நமது உடல்தான் குண்டாக இருக்கிறதே நமக்கு எதற்கு மேக்கப் என்று நினைப்பார்கள். அப்படி நினைக்காமல் அவர்களும் தேவையான அளவு மேக்கப் போட்டுக்கொள்ளவேண்டு்ம். மேக்கப் இல்லாத இருண்ட முகம், உடல் எடையை கூட்டிக்காட்டும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் நீள கூந்தலை கொண்டிருப்பது நல்லது. தோள் அளவுக்கு குட்டையாக முடியை வெட்டிவிட்டிருந்தால் அது முகத்தை கூடுதல் குண்டாக காட்டும். முகம் குண்டாக இருப்பவர்களும், கன்னங்கள் தடிமனாக இருப்பவர்களும் கூந்தலை ஸ்ரெயிட்டனிங் செய்யக்கூடாது. லேயர்களாக்கி கூந்தலை வெட்டி முகத்திற்கு அழகு தரும் விதத்தில் அலங்காரம் செய்யவேண்டும்.
குண்டானவர்கள் ஜீன்ஸ் அணிந்தால், இறுக்கமான டாப் அணிவதை தவிர்க்கலாம். மெல்லிய மெட்டீரியலில் தயாரான கம்பர்ட் பிட் டாப் அணிந்தால், உடல் குண்டாகத் தோன்றாது. குர்தாவுடன் கூடிய லெகின்ஸ் அணிவதை தவிர்த்துவிடலாம். அது தடிமனான தொடைப் பகுதியை கூடுதலாக்கிக் காட்டிவிடு்ம்.
குண்டான உடலைக் கொண்டவர்கள் கனம் குறைந்த புடவைகளை தேர்ந்தெடுத்து உடுத்தவேண்டும். பெரிய பார்டரும், லாங் ஸ்லீவ் காண்ட்ராஸ்ட் ஜாக்கெட்டும் அவர்களுக்கு பொருந்தாது.
ஒகாயோ ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு ஒன்றில் ‘கணவரோடு சண்டைபோடும் பெண்களுக்கு எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். கணவரோடு சந்தோஷமாக இருக்கும்போது அவர்கள் உடலில் ஜீரண பணிகள் நன்றாக நடப்பதாகவும், கணவரோடு சண்டையிடும்போது ஜீரண சக்தி குறைவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். ஜீரண சக்தி குறையும்போது உடல் குண்டாகிவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதுபோல் மனஅழுத்தமும் உடலை குண்டாக்கும். ஆகவே உடல் எடையை குறைக்க மகிழ்ச்சி மிக அவசியம்.

நீங்கள் குண்டாக இருந்தால் அதை நினைத்து வருந்தாதீர்கள். வருந்தினால் உங்கள் உடலில் கார்டிசால் என்ற மனஅழுத்த ஹார்மோன் அதிகம் சுரந்து, கூடுதலாக உங்களை குண்டாக்கிவிடும். உங்கள் உடல் எடையை எப்போதுமே நீங்கள் மார்க்கெட்டில் உச்சத்தில் இருக்கும் நடிகைகளின் உடலோடு ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். ஏன்என்றால் சைஸ் ஜீரோ என்பது திறமைக்கான அடையாளம் அல்ல. திறமை வேறு, உடல் அமைப்பு வேறு உண்மையை உணர்ந்து எப்போதும் அதில் விழிப்பாக இருங்கள்.
உடல் எடையை குறைக்கவேண்டும் என்ற எண்ணம் தோன்றும்போதே பட்டினி கிடப்பது, உணவுக் கட்டுப்பாட்டை மேற்கொள்வது, உடற்பயிற்சி மேற்கொள்வது ஆகிய மூன்று விஷயங்களும் குண்டாக இருப்பவர்களின் நினைவுக்கு வரும். இதில் சரியான ஆலோசனையை பெற்று, முறையான முயற்சிகளை மேற்கொள்ளவேண்டும். இல்லாவிட்டால் உடல் நலம்கெட்டு, மன அழுத்தமும் உருவாகி விடும்.
உடல் எடை அதிகமாக இருப்பதாக கருதும் பெண்கள் முதலில் தங்கள் வீட்டில், தனது முழு உருவத்தையும் பார்க்கும் விதத்தில் கண்ணாடி ஒன்றை வாங்கி வைக்க வேண்டும். தினமும் காலையில் அதை பார்த்தபடி, ‘நான் என் உடலை நேசிக்கிறேன். நான்தான் இந்த உலகிலே உற்சாகமானவள்’ என்று சொல்ல வேண்டும். இது அவர்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும். அதுபோல் உடல்வாகுவை சுட்டிக்காட்டி கேலி செய்பவர்களை புறக் கணிக்கும் அளவுக்கு மனதுணிச்சலையும் உருவாக்கிக்கொள்ளவேண்டும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் பொதுவாகவே தங்களை மற்றவர்களுக்கு மத்தியில் மறைத்துக்கொள்ள விரும்புவார்கள். தூண்களுக்கு பின்பும், சுவர்களுக்கு பின்பும் தங்களை மறைக்க வழிதேடுவார்கள். அதுபோல் தங்கள் உடையை அவ்வப்போது சரிசெய்து கொள்ளவும் முனைப்புகாட்டுவார்கள். அதெல்லாம் சரியான வழிமுறை அல்ல. மற்றவர்கள் முன்னால் தைரியமாக நிமிர்ந்து நடக்கவேண்டும். அங்கும் இங்குமாக மறைய வழி இருக்கிறதா என்று பார்க்கக்கூடாது. அதுபோல் உடை விஷயத்திலும் தெளிவாக இருக்கவேண்டும். தேவையில்லாமல் அவ்வப்போது உடைகளை இழுத்து சரிசெய்யக்கூடாது. இதற்கு தேவையான பக்குவத்தை பெறவேண்டும் என்றால், மற்றவர்கள் முன்பும், பொது இடங்களிலும் எந்த தயக்கமும் இன்றி முன்னேறிச் செல்லவேண்டும். அதுமட்டுமின்றி மற்றவர்கள் கேலி செய்துவிடுவார்களோ என்ற அச்சத்தோடு நடக்கக்கூடாது. கேலி செய்தாலும் ஒரு அலட்சிய சிரிப்பை உதிர்த்துவிட்டு, அவர்களை பொருட்படுத்தாமல் முன்னேறிச் சென்றுவிடவேண்டும். கேலி செய்பவர்களிடம் எல்லாம் சண்டையிடத் தொடங்கினால் தன்னம்பிக்கை குறைந்து விடும்.
உடல் எடை அதிகம் கொண்டவர்கள் தங்கள் உடையில் கவனம் செலுத்துவது அவசியம். அவர்கள் பொருத்தமான உடைகளை தேர்ந்தெடுத்து அணிந்தால் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சவுகரியமாகவும் இருக்கும். அதிக இறுக்கம் கொண்ட ‘பிகர் ஹக்கிங் டிரஸ்’ வகைகள் அவர்களுக்கு பொருத்தமானதாக இருக்காது. அதற்கு பதிலாக அதிக தளதள உடைகளை அணிவதும் சரியல்ல. இரண்டு நிலைக்கும் பொதுவான உடைகள் அவர் களுக்கு ஏற்றது. அவர்கள் உள்ளாடைகளில் அதிக கவனம் செலுத்தவேண்டும். அவை சரியாக பொருந்தவேண்டும். சுகாதாரமானதாகவும், தரமானதாகவும் அவை இருக்கவேண்டும். உள்ளாடை தேர்வு சரியாக இல்லாவிட்டால் ஒட்டுமொத்த உடை அலங்காரமும் சொதப்பிவிடும்.
உடல் முழுவதும் ஒரே வண்ணத்திலான உடையை குண்டானவர்கள் அணிவது நல்லது. ஒவ்வொரு பகுதி ஆடையும் வெவ்வேறு நிறத்தில் இருப்பது நல்லதல்ல. பல்வேறு வகையான நிறங்களும், பலவிதமான டிசைன்களும் குண்டானவர் களுக்கு ஏற்றதல்ல. அடர்த்தியான நிறம் அவர்களுக்கு ஏற்றது. சிலருக்கு உடலின் மேல்பாகமும், கீழ் பாகமும் மட்டும் குண்டாக இருக்கும். இடைப்பகுதி ஒல்லியாக காணப்படும். அப்படிப்பட்டவர்கள் ஒல்லியான பகுதியில் இறுக்கமான உடைகளை அணியலாம். அப்போது குண்டாக இருக்கும் பகுதியில் அணியும் ஆடையும் இறுக்கமாக, பொருத்தமாக இருப்பது போன்ற உணர்வு தோன்றும்.
சிலர் நமது உடல்தான் குண்டாக இருக்கிறதே நமக்கு எதற்கு மேக்கப் என்று நினைப்பார்கள். அப்படி நினைக்காமல் அவர்களும் தேவையான அளவு மேக்கப் போட்டுக்கொள்ளவேண்டு்ம். மேக்கப் இல்லாத இருண்ட முகம், உடல் எடையை கூட்டிக்காட்டும்.
உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் நீள கூந்தலை கொண்டிருப்பது நல்லது. தோள் அளவுக்கு குட்டையாக முடியை வெட்டிவிட்டிருந்தால் அது முகத்தை கூடுதல் குண்டாக காட்டும். முகம் குண்டாக இருப்பவர்களும், கன்னங்கள் தடிமனாக இருப்பவர்களும் கூந்தலை ஸ்ரெயிட்டனிங் செய்யக்கூடாது. லேயர்களாக்கி கூந்தலை வெட்டி முகத்திற்கு அழகு தரும் விதத்தில் அலங்காரம் செய்யவேண்டும்.
குண்டானவர்கள் ஜீன்ஸ் அணிந்தால், இறுக்கமான டாப் அணிவதை தவிர்க்கலாம். மெல்லிய மெட்டீரியலில் தயாரான கம்பர்ட் பிட் டாப் அணிந்தால், உடல் குண்டாகத் தோன்றாது. குர்தாவுடன் கூடிய லெகின்ஸ் அணிவதை தவிர்த்துவிடலாம். அது தடிமனான தொடைப் பகுதியை கூடுதலாக்கிக் காட்டிவிடு்ம்.
குண்டான உடலைக் கொண்டவர்கள் கனம் குறைந்த புடவைகளை தேர்ந்தெடுத்து உடுத்தவேண்டும். பெரிய பார்டரும், லாங் ஸ்லீவ் காண்ட்ராஸ்ட் ஜாக்கெட்டும் அவர்களுக்கு பொருந்தாது.
ஒகாயோ ஸ்டேட் யூனிவர்சிட்டி நடத்திய ஆய்வு ஒன்றில் ‘கணவரோடு சண்டைபோடும் பெண்களுக்கு எடை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது’ என்று கண்டறிந்திருக்கிறார்கள். கணவரோடு சந்தோஷமாக இருக்கும்போது அவர்கள் உடலில் ஜீரண பணிகள் நன்றாக நடப்பதாகவும், கணவரோடு சண்டையிடும்போது ஜீரண சக்தி குறைவதாகவும் கண்டறிந்திருக்கிறார்கள். ஜீரண சக்தி குறையும்போது உடல் குண்டாகிவிடுவது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. அதுபோல் மனஅழுத்தமும் உடலை குண்டாக்கும். ஆகவே உடல் எடையை குறைக்க மகிழ்ச்சி மிக அவசியம்.
Related Tags :
Next Story