செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கும் ஆற்றை தூர்வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
செடி, கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கும் ஓடம்போக்கி ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கீழ்வேளூர்,
காவிரி டெல்டா மாவட்டங்களில் நாகை மாவட்டம் கடைமடை பகுதியாக உள்ளது. கடைமடை பகுதியான நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்துள்ள திருக்கணங்குடி, ஆழியூர், ராமர்மடம், பனைமேடு, ஆவராணி, சிக்கல், நாகை வேளாங்கண்ணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுமார் 10 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட விளை நிலங்கள் உள்ளன.
இந்த விளை நிலங்களில் விவசாயிகள் குறுவை, சம்பா, தாளடி ஆகிய நெல் சாகுபடி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போதிய மழை பெய்யாததாலும், மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படாததாலும் குறுவை, சம்பா சாகுபடி பணிகள் பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் டெல்டா விவசாயிகள் குறைந்த அளவு தண்ணீரிலும் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்த பகுதி விவசாயிகளின் நீர் ஆதாரமாக ஓடம்போக்கி ஆறு திகழ்கிறது. நீர் ஆதாரமாகவும், வடிகாலாகவும் பயன்படுத்தப்பட்டு வரும் ஓடம்போக்கி ஆறு கடந்த 3 ஆண்டுகளாக திருவாரூரில் இருந்து கீழ்வேளூர் வழியாக நாகை வரை தூர்வாரப்படாமல் உள்ளது.
இதனால் நீலப்பாடி, குருக்கத்தி, சந்தைதோப்பு, கீழ்வேளூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றில் நெய்வேலி காட்டாமணக்கு செடிகள், கோரைப்புல்கள் மற்றும் கொடிகள் வளர்ந்து புதர்போல் காட்சியளிக்கிறது.
தூர்வாரப்படாததால் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும், கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேருவதில் தடை ஏற்படுகிறது. மேலும், ஆற்றில் வரும் தண்ணீரை செடி,கொடிகள் தடுப்பதால் கடைமடை பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களுக்கு போதிய தண்ணீர் கிடைப்பது இல்லை. அதேபோல் மழை வெள்ள காலங்களில் தண்ணீரை வடிகட்டவும் முடியாத நிலை உள்ளது. எனவே, இந்த ஆண்டு ஆற்றில் தண்ணீர் வருவதற்கு முன்பு திருவாரூர் - நாகை வரை ஓடம்போக்கி ஆற்றை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story