மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் வித்தியாசமான போட்டி


மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் வித்தியாசமான போட்டி
x
தினத்தந்தி 4 Jun 2018 3:45 AM IST (Updated: 4 Jun 2018 12:56 AM IST)
t-max-icont-min-icon

உலக சைக்கிள் தினத்தையொட்டி சைக்கிள் பயணம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சென்னை, திருமங்கலத்தில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையத்தில் வித்தியாசமான போட்டிகள் நடைபெற்றன.

சென்னை,

பெடல் நிறுவனத்துடன் இணைந்து மெட்ரோ ரெயில் நிர்வாகம் நடத்திய இந்த போட்டியில், சைக்கிள் ஓட்டியபடி கால் பந்து விளையாடுவது, 50 மீட்டர் தூரம் சைக்கிள் டயரை குச்சி மூலம் ஓட்டுவது, சைக்கிளில் உட்காரும் சீட்டை கழற்றிவிட்டு 75 மீட்டர் தூரம் ஓட்டுவது மற்றும் சைக்கிள்களுடன் செல்பி எடுப்பது ஆகிய 4 விதமான போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டிகளை சென்னை மெட்ரோ ரெயில் இயக்குனர் (இயக்குதல்) நரசிம்ம பிரசாத் தொடங்கி வைத்தார். போட்டிகளில் பலர் ஆர்வமாக கலந்து கொண்டனர்.

முதல் பரிசு பெற்ற திருமங்கலத்தைச் சேர்ந்த தமிழ்மாறனுக்கு ரூ.16 ஆயிரம் மதிப்பில் கைகெடிகாரம் போன்று கையில் கட்டப்படும் ஆரோக்கியத்தை கணக்கிடும் கருவியும், 2-வது பரிசு பெற்ற அண்ணாநகரைச் சேர்ந்த அழகரசன் மற்றும் 3-வது பரிசு பெற்ற அம்பத்தூரைச் சேர்ந்த தினேஷ் ஆகியோருக்கு சாப்ரான் ஓட்டலில் ஒரு நாள் தங்குவதற்கான கூப்பன் பரிசாக வழங்கப்பட்டது.

Next Story