ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்


ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 4 Jun 2018 4:30 AM IST (Updated: 4 Jun 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் அவசர சட்டம் இயற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நெய்வேலி,

தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் நெய்வேலி என்.எல்.சி. ஆர்ச்கேட் அருகே உள்ள கட்சி தலைவர் இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில நிர்வாகக்குழு நிர்வாகி திருமால்வளவன் தலைமை தாங்கினார். மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் வருமாறு:–

தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மீது அ.தி.மு.க. அரசு திட்டமிட்டு பொய்வழக்குகள் போடுவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் பெரியாண்டிக்குழியை சேர்ந்த ஜெகன் என்பவர் தீக்குளித்து இறந்துள்ளார். அவரது குடும்பத்துக்கு கட்சி சார்பில் ரூ.5 லட்சமும், அவரது குழந்தைகளுக்கு படிப்பு செலவுகளை கட்சியே ஏற்று கொள்வது, காடுவெட்டி குருவுக்கு மறைவுக்கு இரங்கல் தெரிவிப்பது, தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டிற்கு உத்தரவிட்ட மாவட்ட கலெக்டர், காவல் துறை அதிகாரி, தலைமை செயலர் ஆகியோர் மீது சட்ட நடவடிக்கை எடுப்பதோடு, பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையிலான ஆணையத்தை அமைத்து விசாரணை நடத்த வேண்டும்,

துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானதாக அரசு அறிவித்துள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று தூத்துக்குடி மக்கள் தெரிவிக்கிறார்கள். எனவே இது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும், மேலும் தூத்துக்குடியில் குவிக்கப்பட்டுள்ள போலீசாரை உடனே திரும்ப பெற வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட முறையாக சட்டமன்றத்தை கூட்டி அவசர சட்டம் இயற்ற வேண்டும், காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையம் அமைப்பதாக மத்திய அரசிதழில் வெளியிட்டதாக தகவல் வெளிவருகிறது. இதனை நிராகரித்து சுயஅதிகாரம் உடைய மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் தமிழக அரசை கேட்டுக்கொள்வது, ஆண்டுதோறும் ஜூன் 12–ந்தேதி குறுவை சாகுபடிக்கு மேட்டூரில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்படும். இதற்கான ஏற்பாட்டை தமிழக அரசு தொடங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


Next Story