சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் பா.ஜ.க. வலியுறுத்தல்
சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்தி பா.ஜ.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் நேற்று முன்தினம் பெரம்பலூரில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சாமி. இளங்கோவன் தலைமை தாங்கினார். நகர் மண்டல தலைவர் முருகேசன் வரவேற்றார். மாநில செயலாளர் புரட்சிக்கவிதாசன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில் திருச்சி கோட்ட பொறுப்பாளர் சிவசுப்ரமணியம், மாவட்ட நிர்வாகிகள் அடைக்கலராஜ், இளங்கோவன், சாமிநாதன், ராஜேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு;-
ரெயில்வே பாதை
சிறுவாச்சூரில் தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுத்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனுக்கு நன்றி தெரிவிப்பது. பெரம்பலூர் மாவட்டத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ள சிறப்பு பொருளாதார மண்டல திட்டம், அரசு மருத்துவக் கல்லூரி, ஜவுளிப் பூங்கா, சின்னமுட்டுலு நீர்த்தேக்கம் ஆகிய திட்டங்களை உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்துவது. பெரம்பலூர் மாவட்டத்தில் ரெயில்வே பாதை அமைத்து ரெயில் விட மத்திய அரசை வலியுறுத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Tags :
Next Story