சரக்கு ஆட்டோவில் கோழிக்கூண்டுகளை அடுக்கி வைத்து நூதன முறையில் மணல் கடத்தல் - லாரி, ஆட்டோ பறிமுதல்
வேலூர் அருகே கோழிக்கூண்டுகளை அடுக்கி வைத்து நூதன முறையில் மணல் கடத்திய சரக்கு ஆட்டோ மற்றும் லாரியை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
வேலூர்,
வேலூர் பாலாற்றில் தற்போது தண்ணீர் இல்லாததால் மணல் மேடுகளாக காட்சி அளிக்கிறது. இந்த மணலை பலர் லாரி, வேன்களில் கடத்தி விற்று வருகின்றனர். மணல் கடத்தலை தடுக்க மாவட்ட கலெக்டர் ராமன் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர் ஒரு பிரிவாகவும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் உத்தரவின் பேரில் காவல்துறையினர் மற்றொருபிரிவாகவும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும் மணல் கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் பல்வேறு புதிய யுக்திகளை கையாண்டு மணல் கடத்தி வருகின்றனர்.
வேலூர் தாசில்தார் பாலாஜி, மண்டல துணை தாசில்தார் விநாயகமூர்த்தி, சத்துவாச்சாரி வருவாய் ஆய்வாளர் சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் கனகராஜ் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் நள்ளிரவில் வேலூர் அருகே அன்பூண்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கோழிக்கூண்டுகளை ஏற்றிய ஒரு சரக்கு ஆட்டோ வந்தது. இதைப்பார்த்த அதிகாரிகள் ஆட்டோ மீது சந்தேகம் அடைந்தனர்.
உடனடியாக அவர்கள் ஆட்டோவை மடக்கி டிரைவரிடம் விசாரணை நடத்தி ஆட்டோவை அவர்கள் சோதனை செய்தனர். அப்போது பாலாற்றில் இருந்து மணல் எடுத்து ஆட்டோவில் பரப்பி அதன் மேலே கோழிக்கூண்டுகளை அடுக்கி வைத்து நூதன முறையில் கடத்தியது தெரியவந்தது. இதையடுத்து ஆட்டோவை பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக ஆட்டோவின் உரிமையாளரான பள்ளிகொண்டாவை சேர்ந்த ஜாகீர் என்பவருக்கு ரூ.27 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. இதே போல பென்னாத்தூர் பகுதியில் ரோந்து பணியில் வருவாய்த்துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை மடக்கினர். அப்போது லாரி டிரைவர் தப்பியோடி விட்டார். லாரியை சோதனை செய்த போது, அதில் பாலாற்றில் இருந்து மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல் செய்து அதன் உரிமையாளரான கந்தநேரியை சேர்ந்த வெங்கடேசன் என்பவருக்கு ரூ.27 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story